News August 13, 2024
பெண் மருத்துவர் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்

கொல்கத்தா அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு முதுநிலை மாணவி, சில தினங்களுக்கு முன்பு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். பிரேத பரிசோதனையில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதில் சஞ்சய் ராய் என்பவரை போலீஸார் கைது செய்த நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News March 16, 2026
FLASH: விலை ஒரேயடியாக ₹1 லட்சம் குறைந்தது

டாடா தனது EV கார்களுக்கு மார்ச் மாத சலுகைகளை அறிவித்துள்ளது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பணத்தை மிச்சப்படுத்தலாம். எந்த மாடல் காருக்கு எவ்வளவு சலுகை என்பதை மேலே போட்டோக்களாக கொடுத்துள்ளோம். இடதுபுறமாக SWIPE செய்து பாருங்க. இந்த தள்ளுபடி சலுகைகள் மார்ச் மாதம் வரை மட்டுமே வழங்கப்படும்.
News March 16, 2026
ஜன நாயகன் படம் ரிலீஸ்.. வெளியானது HAPPY NEWS

ஜன நாயகன் படத்தை சென்சார் போர்டின் மறு ஆய்வுக்குழு நாளை பார்க்க உள்ளதாம். நாளை மறு ஆய்வு நடைபெறாவிட்டால் மார்ச் 19-ல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரமே படத்தை மறு ஆய்வுக்குழு பார்ப்பதாக இருந்த நிலையில், குழுவில் ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தள்ளிப்போனது. பொங்கலுக்கு வெளியாக இருந்த ஜன நாயகன் படம், சென்சார் பிரச்னையால் தற்போதுவரை ரிலீஸாகாமல் இருக்கிறது.
News March 16, 2026
ஏற்றம் கண்ட பங்குச்சந்தை.. உற்சாகத்தில் முதலீட்டாளர்கள்!

USA – ஈரான் போரின் எதிரொலியால், கடந்த வாரம் இந்திய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன. இந்நிலையில், வாரத்தில் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. சென்செக்ஸ் 939 புள்ளிகள் உயர்ந்து 75,502 புள்ளிகளிலும், நிப்டி 257 புள்ளிகள் உயர்ந்து 23,408 புள்ளிகளிலும் வர்த்தகமாயின. பெரும்பாலான வங்கிகளின் பங்கு மதிப்பு உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


