News August 13, 2024

நிதி மோசடி வழக்கில் தேவநாதன் கைது

image

சென்னை மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் ரூ.525 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதன் கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை அருகே கட்டியாவயல் என்னும் இடத்தில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் அதிக வட்டி தருவதாக முதலீடு பெற்று வாடிக்கையாளரை ஏமாற்றியதாக புகார் எழுந்தது.

Similar News

News March 5, 2026

புதுகை: இறந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு!

image

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பேருந்து நிலையம் பின்புறம் அடையாளம் தெரியாத 45 வயது மதிப்பு தக்க ஆண் சடலம் இருப்பதாக அறந்தாங்கி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து, இது குறித்து பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 5, 2026

புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.04) இரவு 10 முதல் இன்று (மார்ச்.05) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 5, 2026

புதுகை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

image

வண்டி எண்.16128 குருவாயூர் – தாம்பரம் விரைவு ரயில் இந்த மாதம் முழுவதும், மதுரை, புதுக்கோட்டை வழியாக திருப்பி விடப்படுகிறது. இந்நிலையில், இந்த ரயிலானது அருப்புக்கோட்டை, புதுக்கோட்டையில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதனை புதுக்கோட்டை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

error: Content is protected !!