News August 13, 2024
பாஜக வேட்பாளர் தேவநாதன் கைது

சுமார் ரூ.50 கோடி மோசடி செய்த வழக்கில் பாஜக வேட்பாளர் தேவநாதனை போலீசார் கைது செய்துள்ளனர். ‘தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிமிடெட்’ சார்பில் அதிக வட்டி தருவதாக கூறி ஏமாற்றியதாக புகார் பதிவாகியுள்ளது. இதனையடுத்து, அந்நிறுவன தலைவரான தேவநாதனை திருச்சி போலீசார் கைது செய்தனர். அண்மையில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் இவர் சிவகங்கை தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்டார்.
Similar News
News August 16, 2025
கூலி படத்திற்கு சம்பளம் வாங்கவில்லை: ஆமீர் கான்

கூலி படத்தில் நடித்ததற்காக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமீர் கான் ₹20 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக சமூக வலைதளத்தில் செய்தி பரவியது. இந்நிலையில், இதை மறுத்துள்ள ஆமீர் கான், கூலி படத்துக்காக நான் சம்பளம் ஏதும் வாங்கவில்லை. ரஜினி சார் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருக்கிறேன். அவருடன் நடித்ததே எனக்குப் பெரிய பரிசுதான். அதனால் பணம் பற்றி யோசிக்கக் கூட முடியவில்லை என்று விளக்கமளித்துள்ளார்.
News August 16, 2025
பனையூரில் இருந்து வெளியே வாங்க விஜய்: செல்லூர் ராஜு

எல்லோரும் எம்ஜிஆராக நினைக்கிறார்கள்; ஆனால் எப்போதும் ஒரே எம்ஜிஆர் தான் என்று விஜய்யை செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். பனையூரில் இருந்து அரசியல் செய்யும் விஜய், முதலில் களத்துக்கு வர வேண்டும் எனக் கூறிய அவர், மாநாடு, செயற்குழுவில் பேசிய இமேஜை வைத்து வெற்றி பெறலாம் என்று விஜய் நினைத்தால், அதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
News August 16, 2025
ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த CM ஸ்டாலின்

திரையுலகில் 50 ஆண்டுகளை தொட்ட ரஜினிக்கு CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். திரையுலகில் நுழையும் போது இருந்த துடிப்பும், வேகமும் இன்றும் ரஜினியிடம் இருப்பதை ’கூலி’ படத்தில் பார்த்து தெரிந்துக்கொண்டதாகவும், ’பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா’ என்ற பாடல் வரிகள் மிகப் பொருத்தமானது எனவும் தெரிவித்துள்ளார்.