News August 13, 2024
இந்துக்களை தாக்குவோர் உண்மையான முஸ்லிம் அல்ல

வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடந்து வருகிறது. இதனை எதிர்த்து வங்கதேச முஸ்லிம்கள் ஊடகங்களுக்கு பேட்டியளித்தனர். அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வங்கதேசத்தை முஸ்லிம் நாடாக மாற்ற ஜமாத் இ இஸ்லாமி முயற்சிக்கிறது. நாங்கள் அதனை அனுமதிக்க மாட்டோம். இந்துக்கள் எங்கள் சகோதரர்கள். இந்துக்களை தாக்குபவர்கள் முஸ்லிமாக இருக்க முடியாது என அவர்கள் கூறினர்.
Similar News
News August 16, 2025
பனையூரில் இருந்து வெளியே வாங்க விஜய்: செல்லூர் ராஜு

எல்லோரும் எம்ஜிஆராக நினைக்கிறார்கள்; ஆனால் எப்போதும் ஒரே எம்ஜிஆர் தான் என்று விஜய்யை செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். பனையூரில் இருந்து அரசியல் செய்யும் விஜய், முதலில் களத்துக்கு வர வேண்டும் எனக் கூறிய அவர், மாநாடு, செயற்குழுவில் பேசிய இமேஜை வைத்து வெற்றி பெறலாம் என்று விஜய் நினைத்தால், அதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
News August 16, 2025
ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த CM ஸ்டாலின்

திரையுலகில் 50 ஆண்டுகளை தொட்ட ரஜினிக்கு CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். திரையுலகில் நுழையும் போது இருந்த துடிப்பும், வேகமும் இன்றும் ரஜினியிடம் இருப்பதை ’கூலி’ படத்தில் பார்த்து தெரிந்துக்கொண்டதாகவும், ’பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா’ என்ற பாடல் வரிகள் மிகப் பொருத்தமானது எனவும் தெரிவித்துள்ளார்.
News August 16, 2025
தீபாவளி பரிசால் ஷாக் ஆகும் மது பிரியர்கள்

தீபாவளி பரிசாக GST வரி முறைகளில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக மோடி நேற்று அறிவித்தார். தற்போது 5 விதமாக இருக்கும் GST வரி, 2 விதமாக (5%, 18%) மாற்றப்படவுள்ளன. இதில் ஆடம்பரப் பொருட்கள், மதுபானங்களுக்கு மட்டும் 40% சிறப்பு வரி விதிக்கப்படும் என கூறப்படுகிறது. தீபாவளிக்கு அதிகளவில் விற்பனையாவது ஆடம்பரப் பொருட்கள், மதுபானம் தான். இது தீபாவளி பரிசு அல்ல சுமை என நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.