News August 13, 2024
ராணிப்பேட்டையில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 288 கிராம ஊராட்சிகளிலும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் காலை 11 மணிக்கு அந்தந்த ஊராட்சிகளில் நடத்த வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், கிராம சபை கூட்டத்தில் கிராமங்களில் சுத்தமான குடிநீர், இணைய வழியில் வரி செலுத்துதல், சுற்றுப்புற தூய்மை, சுகாதாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
Similar News
News March 11, 2026
ராணிப்பேட்டை: வாக்கு சேகரிப்பை தொடங்கிய நாதக வேட்பாளர்!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ராணிப்பேட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தாரிக்கா சல்மான், வாலாஜாபேட்டை நகரில் நேற்று இரவு தனது முதல் நேரடிப் பரப்புரையைத் தொடங்கினார். பொதுமக்களைச் சந்தித்து அவர் வாக்கு சேகரித்த நிகழ்வு, தொகுதியில் அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது. இந்நிகழலவில் அக்கட்சி தொண்டர்கள் & நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
News March 11, 2026
ராணிப்பேட்டையில் பயங்கரம்!

சயனபுரம் புதுக்கண்டிகையை சேர்ந்தவர் அருண். இவரது மனைவி எழிலரசி (21). கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டில் வசித்து வந்தார். நேற்று மார்ச் 10ம் தேதி தாய் வீட்டில் எழிலரசி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்துகிறார். நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
News March 11, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


