News August 13, 2024

அரசு பேருந்து கட்டணம் உயர்வு?

image

பேருந்து கட்டணத்தை உயர்த்துவது குறித்து பரிந்துரைக்க தனி ஆணையம் அமைக்க அரசு முடிவு எடுத்துள்ளதாக அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். மின் கட்டணம், பத்திரப் பதிவுக் கட்டணத்தை தொடர்ந்து, பேருந்து கட்டணம் உயர்வு என்பது ஏழை, எளிய மக்களை கடுமையாக பாதிக்கும். போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாகத்தில் நடைபெறும் முறைகேடுகளை களையாமல் பேருந்து கட்டணத்தை உயர்த்துவதால் எந்த பயனும் இல்லை என தெரிவித்துள்ளார்.

Similar News

News March 21, 2026

CINEMA 360: KH×RK பட அப்டேட் கொடுத்த கமல்!

image

KH×RK படத்தின் ஷூட்டிங் தேர்தலுக்கு பிறகு தொடங்கும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் *‘அசத்தீட்டீங்க தம்பி’ என ‘யூத்’ படத்திற்காக கென் கருணாஸை சிம்பு பாராட்டியுள்ளார் *பரத் நடித்துள்ள காளிதாஸ் 2 படத்தின் ட்ரெயிலர் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது *சாமானிய மக்களின் வாழ்க்கை & போராட்டங்களை பிரதிபலிக்கும் வகையிலான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடிப்பதாக யோகிபாபு தெரிவித்துள்ளார்.

News March 21, 2026

வேட்பாளர்களின் சமூக வலைதள விவரங்களை கேட்கும் ECI

image

வேட்புமனுவில் தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதள (SM) கணக்கு விவரங்களை வேட்பாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ECI தெரிவித்துள்ளது. மேலும், டிவி, ரேடியோ, SMS, SM-களில் மேற்கொள்ளப்படும் பிரசாரங்களுக்கு ஊடகச் சான்றிதழ் & தேர்தல் கண்காணிப்பு குழுவிடம் அனுமதி பெற வேண்டும். அத்துடன், தேர்தல் முடிவடைந்த 75 நாள்களுக்குள் SM உள்பட டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்பட்ட பிரசார செலவினங்களை ஒப்படைக்க வேண்டும்.

News March 21, 2026

தவெக கூட்டணி… கடைசி நேரத்தில் மாற்றம்

image

TN சட்டப்பேரவைத் தேர்தலில் 5 முனைப்போட்டி உருவாகியுள்ளது. தவெகவுடன் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சசிகலாவும், ராமதாஸும் கடைசி நேரத்தில் திடீர் திருப்பமாக புதிய கூட்டணியை உருவாக்கிவிட்டனர். இதனால், அந்த இருவரும் தவெகவுடன் கூட்டணி இல்லை என்பது உறுதியாகிவிட்டது. அதேபோல், கிருஷ்ணசாமியும் அதிமுகவுடன் கூட்டணியை பேசி முடித்துவிட்டதால், தவெக வரும் தேர்தலில் தனித்து களம் காண முடிவெடுத்துவிட்டதாம்.

error: Content is protected !!