News August 13, 2024
நாமக்கல்: மீன் உணவு தயாரிக்க இலவச பயிற்சி

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வரும் 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு ‘மீன்களுக்கான மீன் உணவு தயாரிக்கும் முறைகள்’ என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள விவசாயிகள் முன்பதிவு செய்துகொள்ள தொடர்ப்புக்கு 04286 266345, 266650 மற்றும் 7358594841 என்ற எண்களை அணுகலாம் என வேளாண் அறிவியல் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 15, 2025
நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (நவ.15) நாமக்கல் – (பாலசந்தர் – 9498169138), வேலூர் – (ரவி – 9498168482), ராசிபுரம் – (கோவிந்தசாமி- 9498169110), குமாரபாளையம் – (மாதேஸ்வரன்- 9498168949) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News November 15, 2025
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு!

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று நவம்பர்-15ம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் 5 காசுகள் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது. மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்தது. இதன் காரணமாக ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.95 ஆக உயர்ந்தது. மேலும் நேற்று ரூ.5.90 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
News November 15, 2025
நாமக்கால ஆயுதப்படையில் வாராந்திர கவாத்து பயிற்சி!

நாமக்கல் மாவட்ட ஆயுதப்படையில், வாராந்திர கவாத்து இன்று நவம்பர்-15 காலை 7.00 மணிக்கு நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விமலா கவாத்தை ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்களிலிருந்தும் காவலர்கள் முதல், துணை காவல் கண்காணிப்பாளர் வரை ஆயுதப்படை மைதானத்தில் கவாத்தில் பங்கேற்றனர்.


