News August 13, 2024

திண்டிவனத்தில் காய்கறி கடைகள் இன்று அடைப்பு

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள காய், கனி வியாபாரிகள் சங்கத்தினர் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். காய்கறி மார்க்கெட்டில் செயல்படாத கழிவறையை சீரமைக்க வேண்டும். மார்க்கெட்டில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியாக மார்க்கெட் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கடைகளை அடைத்து போராட்டம் நடத்துகின்றனர்.

Similar News

News March 5, 2026

விழுப்புரம்: ரயில்வேயில் 5349 காலியிடங்கள் – NO EXAM!

image

விழுப்புரம் மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23-ம் தேதிக்குள் இங்கே<> கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். உடனே அனைவருக்கும் SHARE!

News March 5, 2026

விழுப்புரம் BDO எண்களை தெரிஞ்சிக்கோங்க!

image

விழுப்புரம் மக்களே.., சாலை வசதி, பாலம், மின் விளக்கு, நிழற்குடை, குடிநீர் வசதிகள் குறித்த புகார், கோரிக்கைகளை உங்கள் பகுதி BDOக்களிடம் வழங்கலாம். மேல்மலையனூர் – 04145-234231, வல்லம் – 04145-235241, செஞ்சி – 04145-222011, வானூர் – 0413-2677310, மரக்காணம் – 04147-239231, மைலம் – 04147-237224, ஒலக்கூர் – 04147-238314, விக்கிரவாண்டி – 04146-233208, கண்டமங்கலம் – 0413-2644128, கோலியனூர் – 04146-260312.

News March 5, 2026

விழுப்புரம் ரயில் நிலையத்தில் துடிதுடித்து பலி!

image

விழுப்புரம் பவர் ஹவுஸ் சாலையைச் சேர்ந்த மணிகண்டன் (38), விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பெட்டிகளைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று ரயில் யார்டில் தண்ணீரை பீய்ச்சியடிக்கும் கருவி மூலம் அவர் சுத்தம் செய்தபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!