News August 13, 2024

SC பட்டியல் 3ஆக பிரிப்பு?

image

அருந்ததியர் 3% உள் ஒதுக்கீடு செல்லும் என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு அமைச்சர் எல்.முருகன் வந்தார். அப்போது, தமிழ்நாட்டில் 18% SC இடஒதுக்கீட்டை 3ஆக பிரித்து, தேவேந்திரகுல வேளாளருக்கு 6%, அருந்ததியருக்கு 6%, ஆதிதிராவிடருக்கு 6% கொடுக்கணும் என அவர் கூறியதாக எம்பி ரவிக்குமார் பதிவிட்டுள்ளார். இது சாத்தியமா?

Similar News

News March 8, 2026

செல்வாக்கை இழந்ததால், ₹5000 கொடுத்த திமுக: EPS

image

அந்தியூரில் பிரசாரம் மேற்கொண்ட EPS, திமுக MLA-வின் ஹாஸ்பிடலில் ஏழைகளிடம் கிட்னி திருடப்பட்டதாக குற்றம் சாட்டினார். திமுகவினர் போதைப்பொருள் விற்பதால், சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருகிறது என்றும், திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் ₹5 லட்சம் கோடி கடன் வாங்கி, மக்கள் மீது வரிச்சுமையை அதிகரித்துள்ளதாகவும் விமர்சித்தார். மேலும், மக்களிடம் செல்வாக்கை திமுக இழந்ததால் தான் ₹5000 வழங்கி இருப்பதாக விமர்சித்தார்.

News March 8, 2026

TN-ல் NDA கூட்டணி ஆட்சி உறுதி: அமித்ஷா

image

மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் வரும் தேர்தலில் NDA கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என அமித்ஷா தெரிவித்துள்ளார். டேராடூனில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்கள் விரோத அரசுகளை வெளியேற்ற மக்கள் தயாராகி வருவதாக கூறினார். தமிழகத்தில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என EPS கூறி வரும் நிலையில், அதற்கு முரணாக அமித்ஷா பேசி வருவது பேசுபொருளாகியுள்ளது.

News March 8, 2026

விஜய் மனைவிக்கு திமுகவில் முதல் ஆதரவு வந்தது

image

விஜய் மனைவி சங்கீதாவுக்கு திமுகவில் இருந்து வெளிப்படையாக ஆதரவு வந்துள்ளது. சங்கீதாவிற்கு அவரது கணவர் வீட்டில் வசிக்கும் உரிமையை சட்டம் தந்திருக்கிறது; காவல்துறையின் உதவியுடன் வீட்டிற்குள் நுழையலாம், அதனை கணவரால் (விஜய்) தடுக்க இயலாது என்று திமுக எம்பியான சல்மா கூறியுள்ளார். விமன் ஹெல்ப்லைன் 181 வழியாக சட்ட உதவி கோர அனைத்துப் பெண்களுக்கும் உரிமை உண்டு எனவும் அட்வைஸ் கொடுத்துள்ளார்.

error: Content is protected !!