News August 13, 2024
உயிரோடு இருப்பவரை இறந்து விட்டதாக பதிவு செய்த அதிகாரிகள்

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இதில் சோளிங்கர் பகுதியை சேர்ந்த பச்சைகான்(79) என்பவர் அளித்த மனுவில், கிசான் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பித்த போது தான் இறந்துவிட்டதாக பதிவாகியுள்ளதாகவும், இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் அதை சரி செய்யவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும், தனக்கு உதவித்தொகை வழங்கமாறு குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News November 10, 2025
ராணிப்பேட்டையில் இன்றே கடைசி-2,708 காலியிடங்கள்!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1) மொத்த பணியிடங்கள்: 2,708, 2) கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET. 3) சம்பளம்: ரூ.57,700-ரூ.1,82,400 வழங்கப்படும். 4) விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று நவ.10. 5) விண்ணப்பிக்க: இங்கே<
News November 10, 2025
ராணிப்பேட்டை: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட அரசு ஊழியர்!

அரிகலபாடி பாளையக்கார கண்டிகையை சேர்ந்தவர் ரமேஷ் (40) மருத்துவமனை ஊழியராக உள்ளார். இவர் தனது மனைவி, 2 மகன்களுடன் நேற்று (நவ.9) கல்லாற்றில் குளிக்க சென்றார். மூத்த மகன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் அவனை காப்பாற்ற கல்லாற்றில் குதித்தார். அவரது மூத்த மகனை மீன் பிடித்தவர்கள் காப்பாற்றிய நிலையில், ரமேஷ் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அரக்கோணம் என்டிஆர்எப் வீரர்கள் ரமேஷை தேடி வருகின்றனர்.
News November 10, 2025
இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு காவல்துறை ரோந்து

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு பாதுகாப்பை மேம்படுத்த காவல்துறை ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ரோந்து குழுவில் ராணிப்பேட்டை, ஆர்காட், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் காவல் நிலைய அதிகாரிகள் நேரடி கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் எவ்வித அவசரத்திலும் கட்டுப்பாட்டு அறை மற்றும் அருகிலுள்ள காவல் நிலையங்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


