News August 13, 2024
Olympics: நாடே எதிர்பார்க்கும் வழக்கில் இன்று தீர்ப்பு

வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டில் இன்று தீர்ப்பு வெளியாகிறது. ஒலிம்பிக்ஸ் மல்யுத்த இறுதிப் போட்டியில் கூடுதல் எடை காரணமாக வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து இந்தியா சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இன்று வெளியாகும் தீர்ப்பில், வினேஷ் போகத்திற்கான நீதி கிடைக்கும் என இந்திய மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
Similar News
News March 5, 2026
கேழ்வரகு கூழ் குடிக்கிறீங்களா? இதை தெரிஞ்சுக்கோங்க

கோடை வெயிலில் தாகத்தை தணிக்க கம்பங்கூழ் மற்றும் கேழ்வரகு கூழ் குடிக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. இவை இரண்டுமே உடலுக்கு நன்மை என்றாலும், கேழ்வரகு கூழை அளவோடு குடிக்க வேண்டும் என டாக்டர்கள் கூறுகின்றனர். ஏனெனில் கேழ்வரகில் கூழ் காய்ச்சி குடித்தால், அது நம் உடலின் ரத்தத்தில் மிக விரைவாக சர்க்கரையாக மாறி விடுமாம். எனவே, இதை சர்க்கரை நோயாளிகள் அளவோடு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
News March 5, 2026
இந்திய துறைமுகங்களை பயன்படுத்தும் அமெரிக்கா?

இந்திய பெருங்கடல் பகுதியில் ஈரானின் போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்கி அழித்தது. இதனால், ஈரானுக்கு எதிராக இந்திய துறைமுகங்களை USA பயன்படுத்துவதாக அந்நாட்டின் பாதுகாப்பு துறையின் முன்னாள் ஆலோசகர் டக்ளஸ் மெக்ரிகோர் குற்றஞ்சாட்டியிருந்தார். இது அடிப்படை ஆதாரமற்றது என மறுத்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், தவறான தகவல் பரப்பியதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
News March 5, 2026
மார்ச் 5: வரலாற்றில் இன்று

*1953 – சோவியத் யூனியனின் சர்வாதிகாரி ஸ்டாலின் நினைவு நாள் *1956 – நடிகை ஸ்ரீபிரியா பிறந்தநாள் *1958 – நடிகர் நாசர் பிறந்தநாள் *1959 – அரசியல்வாதி சிவ்ராஜ் சிங் சௌஹான் பிறந்தநாள் *1976 – இயக்குநர் செல்வராகவன் பிறந்தநாள் *2008 – இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கி. சிவநேசன் படுகொலை *2013 – நடிகை ராஜசுலோசனா நினைவு நாள்


