News August 12, 2024
பெண்களின் எண்ணிக்கை உயரும்

அடுத்த 12 ஆண்டுகளில் இந்தியாவில் மக்கள் தொகை 152.2 கோடியாக உயரும் என புள்ளியியல் மற்றும் திட்ட அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. தற்போது 1000 ஆண்களுக்கு 943 பெண்கள் உள்ள நிலையில், 2036ல் 952 ஆக உயரும் என்றும், பெண்களின் சதவீதம் 48.8% ஆக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், 15 வயதுக்குட்பட்டோரின் விகிதம் குறையும், 60 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
Similar News
News March 19, 2026
தவெகவுடன் கூட்டணி அமைக்க ரங்கசாமிக்கு வலியுறுத்தல்

புதுச்சேரி NDA-வில் லட்சிய ஜனநாயக கட்சியை இணைப்பதில் பாஜக, NR காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. இதனால் தொகுதி பங்கீட்டில் இழுபறியில் நீடிக்கிறது. இதனிடையே CM ரங்கசாமி தலைமையிலான நடந்த அக்கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் தவெகவுடன் கூட்டணி அமைக்க வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. முக்கிய முடிவு எடுப்பதற்கு முன் ரங்கசாமி சேலத்திலுள்ள அப்பா பைத்தியம் சாமி கோவிலுக்கு ரங்சாமி சென்றுள்ளார்.
News March 19, 2026
ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் ஒரு விலை உண்டு: ஈரான்

தேசிய பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானியின் படுகொலைக்குப் பழிவாங்குவதாக ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி சூளுரைத்துள்ளார். இதுபோன்ற தீவிரவாத நடவடிக்கைகள் எதிரிகளின் எப்படிப்பட்டவர்கள் என்பதை காட்டுவதாகவும், இதற்கான நீதி நிச்சயம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் அமெரிக்காவும் இஸ்ரேலும் விலை கொடுக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News March 19, 2026
வரலாற்றில் இன்று

➤1944 – ஜெர்மனியின் நாஜிப் படை ஹங்கேரியைக் கைப்பற்றியது.
➤1972 – இந்தியா – வங்காளதேசம் இடையே 25 ஆண்டு கால அமைதி மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் டாக்காவில் கையெழுத்தானது.
➤1998 இந்தியாவின் பிரதமராக அடல் பிஹாரி வாஜ்பாய் இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றார்.
➤2003 ஈராக் மீது அமெரிக்கா தலைமையிலான படைகள் தாக்குதலைத் தொடங்கின.
➤2008 நடிகர் ரகுவரன் மறைந்த நாள்.


