News August 12, 2024
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 492 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர் மனுதாரர்கள் முன்னிலையில் துறை அதிகாரிகளிடம் பரிந்துரை செய்தார்.
Similar News
News August 20, 2025
திருப்பூர் இரவு ரோந்து போலீசார் எண் அறிவிப்பு

திருப்பூர் மாநகர பகுதிகளில் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் போலீசார் இரவு ரோந்து பணியில் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று இரவு ரோந்து பணி மேற்கொள்ளும் போலீசாரின் எண்கள் காவல் கட்டுப்பட்டு அறையில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் குற்ற செயல்கள் நடைபெற்றால் பொதுமக்கள் அந்த எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும் அவசர உதவிக்கு என் 100-ஐ அழைக்கலாம்.
News August 19, 2025
திருப்பூர்: ரூ.60,000 சம்பளத்தில் அரசு வங்கியில் வேலை!

திருப்பூர் மக்களே, தமிழ்நாட்டில் உள்ள ரெப்கோ வங்கியில், காலியாக உள்ள 30 கிளார்க் (Clerk)/Customer Service Associate பணியிடங்களை நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். இதில் சேர விருப்பமுள்ளவர்கள் வரும் செப்.8ம் தேதிக்குள் <
News August 19, 2025
திருப்பூர்: ரூ.5 லட்சம் இலவச மருத்துக் காப்பீடு!

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். இத SHARE பண்ணுங்க.