News August 12, 2024
பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து

மத்திய பிரதேசத்தில், பயணிகள் ரயில் தடம் புரண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணி கம்லாப்தி-சஹர்ஷா இடையே சென்ற பயணிகள் ரயில், இடார்ஸி ரயில் நிலையம் அருகே தடம் புரண்டதில், 2 பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து விலகின. ரயில் நிலையம் அருகே வந்ததால், ரயில் மெதுவாக சென்றதை அடுத்து பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கடந்த ஒரு மாதத்தில் 12 முறை ரயில் விபத்து நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 9, 2026
மாணவர்கள் கல்வியில் சிறக்க சொல்ல வேண்டிய மந்திரம்!

ஓம் வாக்தேவ்யைச வித்மஹே விரிஞ்சி பத்ந்யைச தீமஹி தந்நோ வாணி: ப்ரசோதயாத் பொருள்: பேச்சின் தெய்வத்தை நாம் தியானிக்கிறோம், ஆசைகளை நிறைவேற்றுபவர் மீது நாம் கவனம் செலுத்துகிறோம், தெய்வீகம் நம்மை ஊக்கப்படுத்தி வழிகாட்டட்டும். (இந்த மந்திரத்தை சொல்வதோடு பாட புத்தகத்தை படிக்க வேண்டியதும் அவசியம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்) SHARE IT.
News March 9, 2026
சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரசரவென குறைந்தது!

சர்வதேச சந்தையில் தங்கம் விலை 1 அவுன்ஸ்(28g) $106(இந்திய மதிப்பில் ₹9,745) குறைந்து $5,045-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையும் 1 அவுன்ஸ் $3 குறைந்து $81 ஆக உள்ளது. இதன் தாக்கத்தால் இந்திய சந்தையில் தங்கம் விலை இன்று காலை நேர வர்த்தகத்தில் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் தங்கம் சவரனுக்கு ₹5,800 குறைந்தது கவனிக்கத்தக்கது. SHARE IT.
News March 9, 2026
திமுகவை காங்கிரஸ் மிரட்டியுள்ளது: EPS

திமுக என்ற மக்கள் விரோத ஆட்சியை அடிப்படையிலிருந்து அகற்ற வேண்டும் என்று ஒத்த கருத்துள்ள கட்சிகள் ஒன்று கூடி NDA கூட்டணி அமைத்துள்ளோம் என EPS தெரிவித்துள்ளார். ஈரோட்டில் பேசிய அவர், அதிமுக பாஜகவுக்கு அடிமை என்று ஸ்டாலின் கூறி வருகிறார்; காங்கிரஸ் திமுகவை அடிமையாக்கி கூட்டணி வைத்த சம்பவத்தை யாரும் மறக்கவில்லை என்றார். திமுகவை மிரட்டி 28 இடங்களை காங்கிரஸ் வாங்கியுள்ளது எனவும் விமர்சித்துள்ளார்.


