News August 12, 2024
டாஸ்மாக் வேண்டும் என மக்கள் மனு

தர்மபுரி மாவட்டத்தில் 7 கிராம மக்கள் சேர்ந்து, தங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை வேண்டும் என்று கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். நலப்பரம்பட்டி, கெட்டூர், பலஞ்சர அள்ளி, ஆதனூர், நல்லாம்பட்டி, வண்ணாத்திபட்டி ஆகிய பகுதியில் வசிக்கும் மக்கள், 20 கிமீ பயணம் செய்து மது வாங்க வேண்டிய நிலை இருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனு அளிக்க ஆண்கள், பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.
Similar News
News March 12, 2026
பூமியை நோக்கி வரும் 600 கிலோ ஆபத்து!

நாசா 2012-ல் விண்ணில் ஏவிய 600 கிலோ எடை கொண்ட Van Allen Probe A விண்கலம் எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே பூமிக்கு திரும்புகிறது. விண்கலத்தின் பெரும்பாலான பகுதிகள் வளிமண்டலத்திலேயே எரிந்து சாம்பலாகிவிடும் என்றும் எஞ்சியிருக்கும் பெரும்பாலான துண்டுகள் தண்ணீரில் விழும் என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும், அது பூமியில் எங்கு விழும் என்று தெரியாததால், இதனால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
News March 12, 2026
349 பணியிடங்கள், ₹57,000 சம்பளம்.. இன்றே கடைசி!

மத்திய ஆயுத காவல் படையில் 349 உதவி கமாண்டண்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் இப்பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். டிகிரி முடித்திருந்தால் போதுமானது. இப்பணிக்கு <
News March 12, 2026
20 ஆண்டுகளாக Ex.CM-ஐ கொல்ல ஆசை.. வாக்குமூலம்

பரூக் அப்துல்லா மீது <<19359220>>துப்பாக்கிச்சூடு<<>> நடத்தியதாக ஜம்முவை சேர்ந்த கமல் சிங்(63) கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த 20 வருடங்களாக ஃபரூக் அப்துல்லாவை கொல்ல விரும்பினேன் என்ற அவர் இதுவே தன்னுடைய நோக்கம் எனவும் கூறி பகீர் கிளப்பியுள்ளார். மேலும் ஃபரூக்கை கொல்வதற்கான வாய்ப்பு தனக்கு கிடைத்தது. ஆனால் அவர் அதிர்ஷடவசமாக உயிர்தப்பியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.


