News August 12, 2024

இந்திய அணியின் ஃபிட்டஸ்ட் பாய் இவர்தான்…

image

விராட் கோலியின் உடற்தகுதி 19 வயது இளைஞரை விட சிறப்பாக இருப்பதாக ஹர்பஜன் சிங் பாராட்டியுள்ளார். ரோஹித் ஷர்மா, கோலி ஆகியோரின் ஃபிட்னஸ் குறித்து பேசிய அவர், இன்னும் 2 ஆண்டுகளுக்கு ரோஹித் எளிதாக விளையாட முடியும் என்றார். கோலியின் உடற்தகுதி குறித்து உங்களுக்கு தெரியாது எனக் கூறிய அவர், அணியின் ஃபிட்டஸ்ட் பாய் என புகழாரம் சூட்டினார். 19 வயது இளைஞரையும் ஃபிட்னஸில் கோலி வீழ்த்துவார் என்றார்.

Similar News

News March 10, 2026

பார்லிமென்ட் நடக்க ஒரு நாளைக்கு இவ்வளவு செலவா?

image

பார்லிமென்ட் அவை நடவடிக்கைக்காக ஒவ்வொரு நிமிடத்திற்கும் ₹2.50 லட்சம் செலவாவதாக சபாநாயகர் (பொறுப்பு) ஜெகதாம்பிகா பால் தெரிவித்துள்ளார். ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதிக்க கோரி எதிர்க்கட்சி MP-க்கள் லோக்சபாவில் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, அவை நடவடிக்கைகளுக்கு ஒரு நாளைக்கு ₹9 கோடி செலவாகிறது. ஆனால், மக்கள் பணத்தை எதிர்க்கட்சி MP-க்கள் வீணடிப்பதாக சாடியுள்ளார்.

News March 10, 2026

ஸ்டாலினுக்கு திமுக கூட்டணி கட்சிகள் நெருக்கடி

image

சென்னை மண்டலத்திற்குட்பட்ட தொகுதிகளை கேட்டு ஸ்டாலினுக்கு கூட்டணி கட்சிகள் நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது. பிரேமலதா தனக்காக விருகம்பாக்கம் தொகுதியை கேட்பதால், முடியாது எனக்கூற முடியாமல் திமுக தவிக்கிறதாம். அதேபோல், பெரம்பூர் அல்லது மதுரவாயல் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூ., ஆர்.கே.நகர் தொகுதியை விசிகவும் கேட்பதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் 1 தொகுதியை மட்டுமே கூட்டணிக்கு திமுக ஒதுக்கியது.

News March 10, 2026

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த கசாயம் அவசியம்!

image

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இலவங்கப்பட்டை – கிராம்பு கசாயம் குடிக்க சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ➤தேவையானவை: இலவங்கப்பட்டை – கிராம்பு , தேன்/ பனங்கற்கண்டு ➤செய்முறை: இலவங்கப்பட்டை – கிராம்பு இரண்டையும் இடித்து, தண்ணீரில் போட்டு 3- 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். பிறகு வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து பருகலாம். இந்த அவசியமான தகவலை அனைவருக்கும் பகிருங்கள். SHARE.

error: Content is protected !!