News August 12, 2024
அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை

தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்காசி, நெல்லையில் மிக கனமழை பெய்யக்கூடும். அதேபோல், குமரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, திருச்சி, கரூர், திருப்பூர், கோவை, நீலகிரி, புதுக்கோட்டை, ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும். எனவே, இரவில் வெளியே செல்வோர் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News March 8, 2026
ஜனாதிபதியை பாஜக தவறாக பயன்படுத்துகிறது: மம்தா

மேற்குவங்கம் சென்ற தன்னை அம்மாநில CM வரவேற்கவில்லை என <<19325512>>ஜனாதிபதி திரெளபதி முர்மு <<>>கூறியது சர்ச்சையானது. இதுகுறித்து பேசிய CM மம்தா பானர்ஜி, மத்திய பிரதேசம் & சத்தீஸ்கரில் பழங்குடியினருக்கு எதிராக அட்டூழியங்கள் நடந்தபோது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என முர்முவுக்கு கேள்வி எழுப்பினார். பாஜக தனது சொந்த ஆதாயத்திற்காக ஜனாதிபதியை அவமதித்து தவறாக பயன்படுத்துவது தவறானது எனவும் சாடியுள்ளார்.
News March 8, 2026
மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்க வேண்டும்: அன்புமணி

ஜனாதிபதி திரவுபதி முர்முவை அற்ப அரசியல் காரணங்களுக்காக மேற்கு வங்க CM அவமதித்திருப்பது கண்டிக்கத்தக்கது என அன்புமணி சாடியுள்ளார். <<19325512>>நாட்டின் முதல் பழங்குடியின பெண் ஜனாதிபதியான முர்முவை அவமதிப்பது<<>> ஒட்டுமொத்த பெண் குலத்தையும், பழங்குடியினரையும் அவமதிக்கும் செயல்; இதற்காக ஜனாதிபதியிடமும், சந்தாலி பழங்குடியினரிடமும் மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News March 8, 2026
தொகுதி மாறுகிறாரா உதயநிதி ஸ்டாலின்?

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் வென்று MLA, அமைச்சர், DCM என அடுத்தடுத்த பதவிகளை பெற்றார் உதயநிதி ஸ்டாலின். வரும் தேர்தலில் அவர் தனது தாத்தாவின் சொந்த தொகுதியான திருவாரூரில் போட்டியிடப்போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தூத்துக்குடியில் பேசிய அவர், தான் எங்கு போட்டியிட வேண்டும் என்று தலைவர் முடிவு எடுக்கிறாரோ, அந்த தொகுதியில் போட்டியிடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.


