News August 12, 2024

திருவாரூரில் போக்குவரத்து மாற்றம்

image

திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் நகருக்குள் வரும் வாகனங்கள் செல்ல வேண்டிய பாதைகள் குறித்த வரைபடத்தை மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ளது. இதனை பின்பற்றி நகருக்குள் வரும் வாகனங்கள் செல்ல காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இதில் இலகுரக வாகனம், கனரக வாகனம், இரு சக்கர வாகனம் மற்றும் ஒரு வழி பாதை என தனித்தனியாக வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஷேர் செய்யவும்

Similar News

News September 12, 2025

திருவாரூர்: பைக்கில் மது பாட்டில்கள் கடத்தியவர் கைது

image

திருவாரூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் அரசு மது பாட்டில்களை விற்பனைக்காக கடத்தி வந்த மாங்குடியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டு, இவர் கடத்தி வந்த 22 லிட்டர் மது பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 12, 2025

வலங்கைமான் பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியம் மேலவிடயல் ஊராட்சி கும்ப சமுத்திரம் கலைஞர் நகரில் கட்டப்பட்டு வரும் பிரதம மந்திரி குடியிருப்பு வீடுகளை திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வ.மோகனசந்திரன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒன்றிய பொறியாளர் உடனிருந்தனர்.

News September 12, 2025

திருவாரூர் இளைஞர்களே RBI வங்கியில் வேலை

image

திருவாரூர் மக்களே இந்த வாய்ப்பை Use பண்ணுங்க! RBI இந்திய ரிசர்வ் வங்கி (Officers) பணிகளை நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது. வங்கி வேலைக்கு செல்ல ஆசை இருக்கா? உடனே Register பண்ணுங்க!

⏩துறை: இந்திய ரிசர்வ் வங்கி
⏩பணி: Officers
⏩மாத சம்பளம்: ரூ. 78,450/-
⏩மொத்தம் பணியிடங்கள்: 120
⏩வயது வரம்பு: 30-க்குள்
⏩கடைசி தேதி: 30.09.2025
⏩இணைய வழியில் விண்ணப்பிக்க: <>Click Here<<>>
மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!