News August 12, 2024

நயனை இயக்கும் ‘மகாராஜா’ இயக்குநர்?

image

நயன்தாராவின் புதிய படத்தை நித்திலன் சுவாமிநாதன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘குரங்கு பொம்மை’, ‘மகாராஜா’ ஆகிய வெற்றி படங்களை இயக்கி, ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் நித்திலன் சுவாமிநாதன். இவரது அடுத்த படம் குறித்த எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், நயனை மையமாக வைத்து அவர் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. எந்த மாதிரியான கதைகளமாக இருக்கும்?

Similar News

News March 10, 2026

இலவசம் கொடுப்பது கேடுகெட்ட ஆட்சிமுறை: சீமான்

image

தேசத்தை நாசமாக்கிய ஒரே சொல் இலவசம் என சீமான் விமர்சித்துள்ளார். இலவசத்தை அறிவிப்பது கேடு கெட்ட ஆட்சிமுறை எனக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் ஆள் மாற்றம் தான் நடக்கிறது, ஆட்சி முறை மாறவில்லை எனவும் தெரிவித்தார். பணம் வாங்கிய மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை; ஓட்டுக்கு பணம் வாங்கும் இடத்தில் ஜனநாயகம் செத்து விடுகிறது என பேசியுள்ளார்.

News March 10, 2026

வங்கி கணக்கில் ₹9,000.. சற்றுமுன் டெபாசிட்

image

பெண்கள் வங்கி கணக்கில் ₹5,000 செலுத்தி தமிழக அரசு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்தது. அதேபோல, அசாமில் ஆளும் பாஜக அரசு அருந்தோய் திட்டத்தின் கீழ் 40 லட்சம் மகளிர் வங்கி கணக்குகளில் ஒரே தவணையாக ₹9,000 வரவு வைத்துள்ளது. தமிழ்நாடுடன் சேர்ந்து அசாமுக்கும் தேர்தல் வரும் நிலையில், ஆட்சியை தக்கவைக்க பாஜக இந்த நகர்வை எடுத்துள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

News March 10, 2026

இரவில் பெண்கள் அதிகம் தேடுவது இதுதான்!

image

இரவு 10 மணியில் இருந்து காலை 4 மணி வரை பெண்கள் அதிகமாக தேடும் விஷயங்கள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. 18- 35 வயதுக்குட்பட்ட பெண்களில் 65% பேர் இரவில் AI பாய் பிரெண்டிடம் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார்களாம். 70% பேர் எதிர்பார்த்தது போல அழகு குறிப்பு பற்றி தேடுகிறார்களாம். 55% பேர் தூக்கமின்மைக்கான தீர்வையும், 60% பேர் ராசிபலன் பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களே.. நீங்க என்ன தேடுவீங்க?

error: Content is protected !!