News August 12, 2024

திருச்சி விமான நிலையத்திற்கு பேருந்து சேவை

image

திருச்சி விமான நிலையத்திற்கு ஆட்டோக்கள் எதுவும் உள்ளே வராத காரணத்தினால் தனியார் டாக்ஸி மூலம் 30 ரூபாய் செலுத்தி நுழைவு வாயில் வரை செல்லலாம் என்று விமான நிலைய நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வந்தது. தற்போது மத்திய பேருந்து நிலையத்திலிருந்து விமான நிலையத்தில் புதிய முனையம் வரையிலும் பேருந்து இயக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News March 11, 2026

திருச்சியில் இன்று போக்குவரத்து மாற்றம்

image

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து வெளியே செல்லும் பேருந்துகளின் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி கரூர், கோவை, சேலம், சென்னை செல்லும் பேருந்துகள், பஸ் ஸ்டான்டின் பின்புறமாக வெளியே வந்து செட்டியபட்டி, சாத்தனூர், ஓலையூர் ஜங்ஷன், கே.கே.நகர், வயர்லெஸ் ரோடு, டிவிஎஸ் டோல்கேட் வழியாக வெளியே செல்ல வேண்டும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 11, 2026

எடப்பாடி பழனிசாமியை வரவேற்க அழைப்பு!

image

திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர்கள் பரஞ்ஜோதி(வடக்கு), குமார்(தெற்கு), சீனிவாசன்(மாநகர்) ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், பஞ்சப்பூரில் இன்று நடைபெறும் பிரதமர் மோடி பங்கேற்கும் NDA பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வரும், அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, காலை 9.30 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதில், அதிமுகவினர் கலந்து கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

News March 11, 2026

திருச்சி: விபத்தில் பள்ளி மாணவர் பலி

image

திருவெறும்பூர் அருகே கூத்தப்பார் பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவர் விக்னேஷ்(16). இவர் அப்பகுதில் பைக்கில் சென்ற போது, அரசன்குடியை சேர்ந்த பிரதீப் என்பவரின் பைக் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், விக்னேஷ், பிரதீப் மற்றும் அவரது மனைவி மூவரும் காயமடைந்தனர். பின் அவர்களை மீட்டு மருத்துமனைக்கு கொண்டு சென்றதில், விக்னேஷ் உயிரிழந்தது தெரியவந்தது.

error: Content is protected !!