News August 12, 2024

ரூ.14.24 லட்சம் நிதி வழங்கிய மாணவர்கள்

image

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு புதுக்கோட்டை எஸ்எம்எஸ் பள்ளி மாணவ, மாணவிகள் ரூ.14.24 லட்சம் நிவாரண தொகையை மாவட்ட ஆட்சியர் அருணாவிடம் வழங்கினர். மாவட்ட ஆட்சியர் அருணா மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர், இவர்களை போல் அனைவரும் உதவி செய்ய வேண்டும் என ஆட்சியர் அருணா கேட்டுக்கொண்டார்.

Similar News

News August 21, 2025

புதுகை அருங்காட்சியகத்தில் புதிர்ப்போட்டி

image

புதுகை அருங்காட்சியகம் சார்பில் ‘அறிவோம் அருங்காட்சியகம்’ என்ற தலைப்பில் வரும் ஆக.21, 22ம் தேதிகளில் அருங்காட்சியகம் வரும் ஆர்வமுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அருங்காட்சியகம் பற்றிய கேள்விகள் கேட்கப்படும். வரும் ஆக.23 அன்று சரியான விடை எழுதியோரில் குலுக்கல் முறையில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்.

News August 21, 2025

புதுகை: ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி?

image

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்ற ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு நீங்கள் விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க!

News August 21, 2025

புதுக்கோட்டை: குரூப் – 2 தேர்வுக்கு இலவச பயிற்சி!

image

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இங்கு ஒவ்வொரு வாரமும் மேற்படி தேர்விற்கான மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், <>-1<<>> என்ற இணையதளத்தில் பாடக்குறிப்புகள், மாதிரி வினாத்தாள்களை இலவசமாக பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!