News August 12, 2024

ஒவ்வொருவர் வாழ்விலும் பங்குச்சந்தை அவசியம்

image

பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யாதவர்கள் ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து கவலையில்லாமல் இருக்கின்றனர். ஆனால், அவர்களுக்கும் அதில் பங்கு உள்ளது என்று முதலீட்டு ஆலோசகர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார். எல்.ஐ.சி, வருங்கால வைப்பு நிதி, காப்பீடு நிறுவனங்கள் ஆகிய அனைவருமே பங்குச்சந்தையில் தான் முதலீடு செய்துள்ளனர். எனவே, சந்தை மாற்றங்கள் அனைவரையும் மறைமுகமாக பாதிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

Similar News

News March 5, 2026

70 தொகுதிகளா? பாஜகவின் பிளானுக்கு EPS பதில்

image

மொத்தமாக 70 தொகுதிகளை கொடுங்கள், நாங்கள் கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுத்துவிடுகிறோம் என்று பியூஷ் கோயல், EPS-யிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், பாஜகவுக்கு 25 தொகுதிகள், மற்ற கட்சிகளுக்கு தாங்களே சீட் ஒதுக்கீடு செய்வதாக EPS கூறிவிட்டாராம். இதனால் ஏற்பட்ட முரண்பாட்டாலேயே அவர் டெல்லி சென்றதாக கூறப்படுகிறது. மேலும், குறைந்தது பாஜகவுக்கு 30 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாம்.

News March 5, 2026

ஏலக்காய் விலை ஒரே நாளில் குறைந்தது

image

போர் பதற்றத்தால், அரபு நாடுகளுக்கான ஏலக்காய் ஏற்றுமதியில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் 1 கிலோ ஏலக்காய் ₹2,400-லிருந்து ₹2,250 ஆக குறைந்துள்ளது. குறிப்பாக, இடுக்கி ஏலக்காய் சந்தைக்கு ஒரு நாளில் 1 லட்சம் கிலோ அளவுக்கு வரத்து இருக்கும் நிலையில், கிலோவுக்கு ₹150 வரை குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். வர்த்தகம் ₹1.50 கோடி வரை குறைந்துள்ளதால் ஏலக்காய் விவசாயிகள், வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

News March 5, 2026

காங்., ராஜ்யசபா வேட்பாளர் அறிவிப்பு

image

திமுக கூட்டணியில் காங்., ராஜ்யசபா வேட்பாளராக அகில இந்திய காங்., செயலாளர் <<19300451>>கிறிஸ்டோபர் திலக்<<>> அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். 1 ராஜ்யசபா சீட் காங்.,க்கு நேற்று ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், இன்று அவர் மனு தாக்கல் செய்யவுள்ளார். மார்ச் 16-ல் நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலில் திமுக சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், தேமுதிகவில் சுதீஷ் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

error: Content is protected !!