News August 12, 2024
7 மாதங்களில் மதுரையில் 381 பேர் கைது

மதுரை மாநகர் காவல் ஆணையர் வெளியிட்ட செய்தி குறிப்பில், மாநகருக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா தடுப்பு குறித்து தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த 7 மாதங்களில் 243 கஞ்சா வழக்குகளில் 381 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து சுமார் 392 கிலோ தடை செய்யப்பட்ட கஞ்சா & 53 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News August 29, 2025
மதுரை: தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தின் கீழ் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ரயிலில் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் தீபாவளி பண்டிகை மற்றும் பண்டிகை தொடர் விடுமுறை முன்னிட்டு எட்டு ரயில்களின் சேவையை ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரயிலில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் முன்பதிவு செய்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க
News August 29, 2025
ஆவின் பொருட்களை விற்பனை செய்யும் முகவராக இணைய அழைப்பு

மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மதுரை ஆவின் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆவின் பாலகங்கள் மற்றும் ஆவின் அலுவலகங்களில் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும் ஆவின் பொருள்களை விற்பனை செய்ய விருப்பம் உள்ளவர்கள் உள்ளவர்களுக்கு முகவர்களுக்கு ஆவின் அழைப்பு விடுத்துள்ளது.
News August 28, 2025
மதுரை: தாசில்தார் லஞ்சம் கேட்டால் இங்க புகாரளியுங்க..!

மதுரை மக்களே, நீங்கள் சாதி சான்று, குடியிருப்பு சான்று (அ) பட்டா, சிட்டா மாற்றம், வரி செலுத்துதல் போன்ற ஏதேனும் ஒரு பணிக்காக தாசில்தார் அலுவலகம் செல்லும் போது, அங்கு குறிப்பிட்ட பணிகளை செய்து தர சிலர் லஞ்சம் கேட்க வாய்ப்புண்டு. அவ்வாறு யாரேனும் லஞ்சம் கேட்கும் பட்சத்தில், 0452-2531395 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகாரளித்தால் உடனடி நடவடிக்கை பாயும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.