News August 12, 2024

17 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்

image

தமிழ்நாட்டில் இன்று 2 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட், 17 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட்டை IMD விடுத்துள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழை, மதுரை, தேனி, திருப்பூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, சேலம், தி.மலை, தென்காசி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளையும் மிக கனமழைக்கான அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 19, 2026

சென்னையில் இந்தி எதிர்ப்பு போராட்டக்காரர் உயிரிழப்பு!

image

சென்னை, பார்க் ரயில் நிலையத்தில் மே 17 இயக்கத்தின் சார்பில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின்போது ரயில் முன் பாய்ந்த சிவகுமார், பலத்த காயமடைந்து, ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று இரவு சிவா என்கிற சிவக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

News March 19, 2026

சற்றுமுன்: விலை சரசரவென குறைந்தது

image

வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால், பல ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், காய்கறிகள் தேக்கம் அடைந்ததால், விலை குறைந்துள்ளது. அந்த வகையில், சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட், முள்ளங்கி, பாகற்காய், புடலங்காய், சுரைக்காய், முருங்கைக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் விலை கிலோவுக்கு ₹5 முதல் ₹10 வரை குறைந்துள்ளது. அதேபோல், TN முழுவதும் பல இடங்களில் விலை குறைந்துள்ளது.

News March 19, 2026

தவெகவா? தனிக் கட்சியா? குழப்பத்தில் ராமதாஸ்!

image

பாமக சின்னம் குறித்த வழக்கு மே 10-ம் தேதிக்கு பிறகே விசாரணை என்ற கோர்ட் உத்தரவு ராமதாஸ் தரப்புக்கு பின்னடைவை கொடுத்துள்ளது. கடந்த வாரமே கூட்டணிக்கான வாகனம் அருகே வந்துவிட்டதாக ராமதாஸ் பேசியிருந்தார். ஆனால், தற்போது வரை முடிவை அறிவிக்காமல் குழப்பத்தில் உள்ளார். தைலாபுரத்தில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் தவெகவுடன் செல்லலாம் என சிலரும், தனியாக போட்டியிடலாம் என சிலரும் சொன்னதாக தகவல் கசிந்துள்ளது.

error: Content is protected !!