News August 12, 2024

வயநாடு நிலச்சரிவு: விசிக ₹15 லட்சம் நிதியுதவி

image

வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்காக விசிக சார்பில் ₹15 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக கேரள சென்ற அக்கட்சி தலைவர் திருமாவளவன், அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து அதற்கான காசோலையை வழங்கினார். முன்னதாக அதிமுக சார்பில் ₹1 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது. வயநாட்டில் கடந்த மாதம் 29ஆம் தேதி நிகழ்ந்த நிலச்சரிவில், 3 கிராமங்கள் மண்ணில் புதைந்ததுடன், 430 பேர் பலியாகியுள்ளனர்.

Similar News

News March 5, 2026

70 தொகுதிகளா? பாஜகவின் பிளானுக்கு EPS பதில்

image

மொத்தமாக 70 தொகுதிகளை கொடுங்கள், நாங்கள் கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுத்துவிடுகிறோம் என்று பியூஷ் கோயல், EPS-யிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், பாஜகவுக்கு 25 தொகுதிகள், மற்ற கட்சிகளுக்கு தாங்களே சீட் ஒதுக்கீடு செய்வதாக EPS கூறிவிட்டாராம். இதனால் ஏற்பட்ட முரண்பாட்டாலேயே அவர் டெல்லி சென்றதாக கூறப்படுகிறது. மேலும், குறைந்தது பாஜகவுக்கு 30 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாம்.

News March 5, 2026

ஏலக்காய் விலை ஒரே நாளில் குறைந்தது

image

போர் பதற்றத்தால், அரபு நாடுகளுக்கான ஏலக்காய் ஏற்றுமதியில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் 1 கிலோ ஏலக்காய் ₹2,400-லிருந்து ₹2,250 ஆக குறைந்துள்ளது. குறிப்பாக, இடுக்கி ஏலக்காய் சந்தைக்கு ஒரு நாளில் 1 லட்சம் கிலோ அளவுக்கு வரத்து இருக்கும் நிலையில், கிலோவுக்கு ₹150 வரை குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். வர்த்தகம் ₹1.50 கோடி வரை குறைந்துள்ளதால் ஏலக்காய் விவசாயிகள், வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

News March 5, 2026

காங்., ராஜ்யசபா வேட்பாளர் அறிவிப்பு

image

திமுக கூட்டணியில் காங்., ராஜ்யசபா வேட்பாளராக அகில இந்திய காங்., செயலாளர் <<19300451>>கிறிஸ்டோபர் திலக்<<>> அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். 1 ராஜ்யசபா சீட் காங்.,க்கு நேற்று ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், இன்று அவர் மனு தாக்கல் செய்யவுள்ளார். மார்ச் 16-ல் நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலில் திமுக சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், தேமுதிகவில் சுதீஷ் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

error: Content is protected !!