News August 12, 2024

அப்பாவுக்கு என் மீது வந்த கோபம்: கனிமொழி

image

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் தனது தந்தை கருணாநிதியை நினைவு கூர்ந்தார் கனிமொழி. அவர் கூறுகையில், “ஒருமுறை டெல்லி சென்ற போது, விமானம் தாமதமாகிவிட்டது. அப்பா போனில் கூப்பிட்டு, விமானம் தாமதமானதை ஏன் கூறவில்லை என அக்கறை கலந்த கோபத்துடன் கேட்டார். நானும் வாக்குவாதம் செய்தேன். ஆனால், இப்போது டெல்லி செல்லும் போது, வந்து சேர்ந்துட்டியா எனக் கேட்க ஆள் இல்லையே என்ற வலி தோன்றும்” என வருந்தினார்.

Similar News

News March 23, 2026

வெளிநாடு சென்று படிக்க ₹36 லட்சம் தரும் அரசு திட்டம்

image

வெளிநாடுகளில் PG/Ph.D படிக்க விரும்பும் பட்டியலின மாணவர்களுக்கு TN அரசு ₹36 லட்சம் வரை உதவித்தொகை தருகிறது. இதில், கல்வி கட்டணம், விசா, தங்குமிட கட்டணம் என அனைத்தும் கவர் ஆகும். அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்திற்கு அப்ளை செய்ய விரும்பும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ₹12 லட்சத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும். 40 வயதுக்குள் இருப்பவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பியுங்கள். SHARE.

News March 23, 2026

கேப்டன் குடும்பத்துக்கு கார் வாங்க கூட தகுதி இல்லையா?

image

பிரேமலதா குடும்பத்தினர் ₹3 கோடி மதிப்பிலான Land Rover defender கார் முன்னால் எடுத்துக்கொண்ட போட்டோ வைரலானது. இந்த கார் திமுக கூட்டணியில் இணைந்தபிறகு பிரேமலதா வாங்கியதாக சிலர் விமர்சித்தனர். இந்நிலையில், அந்த காரை ஒன்றரை வருடத்திற்கு முன்பே வாங்கியதாக தெரிவித்த பிரேமலதா, கேப்டன் குடும்பத்திற்கு ஒரு கார் வாங்க கூட தகுதியில்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

News March 23, 2026

7 வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ₹30,800 குறைந்தது

image

தங்கம் வாங்க நினைத்தோருக்கு இம்மாதம் ஜாக்பாட்டாக அமைந்துள்ளது. இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றத்திற்கு மத்தியிலும் தங்கம் விலை மளமளவென குறைந்து வருகிறது. சர்வதேச சந்தையில் காலை நேர வர்த்தகத்துடன் ஒப்பிடுகையில் தற்போது 1 அவுன்ஸ் $289 குறைந்து $4,195 ஆக உள்ளது. கடந்த ஜன.29-ம் தேதி 1 சவரன் ₹1,34,400-க்கு விற்பனையான நிலையில், தற்போது ₹30,800 சரிந்து ₹1,03,600 ஆக உள்ளது. இது மேலும் குறைய வாய்ப்புள்ளதாம்.

error: Content is protected !!