News August 12, 2024

8ஆம் வகுப்பு தனித்தேர்வருக்கு இன்று ஹால் டிக்கெட் வெளியீடு

image

8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித் தேர்வர்களுக்கு இன்று மாலை ஹால் டிக்கெட் வெளியிடப்படவுள்ளது. தேர்வுத்துறை சேவை மையம் (அ) www.dge.tn.gov.in இணையதளத்தில் மாலை 4 மணி முதல் இதனைப் பதிவிறக்கம் செய்யலாம். இணைய தளத்தில் HALL TICKET என்ற வாசகத்தை கிளிக் செய்து, டவுன்லோடு செய்ய வேண்டும்; விண்ணப்ப எண், பிறந்த தேதியை உள்ளிடுவது அவசியம். ஆக. 19 முதல் 23 வரை பொதுத்தேர்வு நடைபெறுகிறது.

Similar News

News August 19, 2025

BREAKING: கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார் அன்புமணி

image

அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து முடிவெடுக்க, ராமதாஸ் தலைமையிலான ஒழுங்கு நடவடிக்கை குழு தைலாபுரம் தோட்டத்தில் சற்றுநேரத்தில் கூடுகிறது. பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அன்புமணிக்கு, ராமதாஸ் அமைத்த ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது. 24 மணி நேரம் கால அவகாசம் வழங்கப்பட்டும் அவரது தரப்பில் எந்த பதிலும் இதுவரை அளிக்கப்படவில்லை. இதனால், அவர் மீது நடவடிக்கை பாய உள்ளது.

News August 19, 2025

மனிதாபிமானம் மலர்ந்தால் உலகம் அன்பின் தோட்டமாகும்

image

இன்று உலக மனிதாபிமான தினம். துயரத்தில் இருப்பவருக்கு நம்பிக்கையாக, பசியால் வாடுபவருக்கு அன்னமாக, கண்ணீரில் மூழ்குபவருக்கு ஆறுதலாக இருக்க பழகிக் கொள்ளுங்கள். மனிதர்களின் இதயத்தில் கருணை இருந்தால் உலகம் அமைதி அடைந்து, அன்பு, சகோதரத்துவம் நிரம்பிய தாயகமாகிறது. அதனை நோக்கி முன்னேறுவது மனிதனின் ஆகச்சிறந்த பணியாகும். மனிதாபிமானத்துடன் நடந்துக் கொள்வது Best quality அல்ல, அது Basic quality.

News August 19, 2025

INDIA கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் யார்?

image

INDIA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி கட்சித் தலைவர்கள் நேற்று தீவிர ஆலோசனை நடத்திய நிலையில், வேட்பாளரை தேர்வு செய்யும் இறுதி அதிகாரம் காங்., தலைவர் கார்கேவிற்கு வழங்கப்பட்டுள்ளது. வரும் 21-ம் தேதியுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெற உள்ள நிலையில், பாஜக தலைமையிலான NDA கூட்டணி வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!