News August 12, 2024
பிள்ளைகளிடம் திடீர் மாற்றமா? உடனே இதை செய்யுங்க

பள்ளி செல்லும் குழந்தைகளின் பெற்றோருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவுரையைக் கூறியுள்ளார். நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், “அந்தக் காலத்தில் நாம் இருந்ததை போல, நம் பிள்ளைகள் இல்லை. கொரோனாவுக்கு பிறகு குழந்தைகளின் மனநிலை மாறியுள்ளது. உங்கள் பிள்ளைகள் வழக்கத்திற்கு மாறாக சோர்வாகவோ அல்லது பேசாமல் இருந்தாலோ உடனடியாக ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும்” எனக் கூறினார்.
Similar News
News March 12, 2026
விழுப்புரம்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 12, 2026
தோனி மீதான புகார் தள்ளுபடி

IPL-ல் வீரராக விளையாடும் நிலையில் கிரிக்கெட் அகாடமியையும் நடத்துவதால் BCCI விதிகளை மீறியதாக தோனி மீது 2024-ல் ஒருவர் புகார் அளித்தார். இந்த புகாரை விசாரித்த BCCI எதிக்ஸ் அதிகாரி நீதிபதி அருண் மிஸ்ரா, அகாடமியில் தோனி நிர்வாக அல்லது முடிவெடுக்கும் அதிகாரம் பயன்படுத்தியதற்கான ஆதாரம் இல்லை என்று புகாரை தள்ளுபடி செய்துள்ளார். மேலும், அவர் BCCI விதிகளை மீறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 12, 2026
சிலிண்டர் புக்கிங் பிரச்னையா? இப்படி டிரை பண்ணுங்க!

கேஸ் சிலிண்டர் புக்கிங் நம்பர் வேலை செய்யவில்லை என பலரும் புகார் கூறி வருகின்றனர். இதற்கு மாற்று வழியாக CRED, Paytm போன்ற தளங்கள் மூலம் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடிகிறது. இந்த செயலிகளில் உள்ள போன் நம்பரும், சிலிண்டருக்கு பதிவு செய்திருக்கும் நம்பரும் ஒன்றாக இருந்தால் எளிதாக முன்பதிவு செய்யலாம். பணம் செலுத்திய பின்னரே புக் ஆகும் என்பதால், முன்பதிவு ஆனதா இல்லையா என்பதை சரிபார்த்துக் கொள்ளவும்.


