News August 12, 2024

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2024-25-ம் ஆண்டில் ஏழ்மை நிலையில் உள்ள 500 பெண்களுக்கு ரூ.6 கோடியே 45 லட்சம் செலவில் நாட்டின கோழிக்குஞ்சுகள் 50 சதவீத மானியத்தில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் பயனாளி ஏழைப் பெண்ணாக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன் பெற விரும்புவோர் அருகில் உள்ள கால்நடை மருந்தக உதவி மருத்துவரை அணுகலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News

News March 13, 2026

மயிலாடுதுறை: இனி Gpay, Phonepe தேவையில்லை!

image

மயிலாடுதுறை மக்களே, இனி உங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலமாக உங்களது சிம் கார்டின் ரீசார்ஜ், டேட்டா இருப்பு உள்ளிட்டவற்றை அறிய புதிய வழி அறிமுகமாகியுள்ளது. இதற்கு ஜியோ (70007 70007), ஏர்டெல் (24828 20000), Vi (96542 97000) என்ற எண்ணில் ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்யலாம். SHARE பண்ணுங்க..

News March 13, 2026

மயிலாடுதுறை: ஆதார் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு

image

மயிலாடுதுறை மக்களே, உங்கள் ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே<> இங்கே கிளிக்<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். இதுமட்டும் அல்லாது ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News March 13, 2026

மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

image

காவல்துறையிலிருந்து அழைப்பதாகவும், உங்கள் பெயரில் உள்ள பார்சல் கைப்பற்றப்பட்டு அதில் போதை பொருள் இருப்பதாக வரும் போலி அழைப்புகளை நம்பி மக்கள் பீதி அடைய வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் இது போன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் உடனடியாக புகார் தெரிவிக்க போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

error: Content is protected !!