News August 12, 2024
பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடக்கம்

வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கி உள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 268 புள்ளிகள் சரிந்து 79,459 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 84 புள்ளிகள் குறைந்து 24,284 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெறுகிறது. செபி தலைவர் மதாபிக்கு எதிரான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு காரணமாக சரிவை சந்தித்ததாக கூறப்படுகிறது.
Similar News
News March 12, 2026
திமுக அரசை கண்டித்து 17-ம் தேதி NDA போராட்டம்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை காக்க திமுக அரசு தவறிவிட்டதாக EPS குற்றம்சாட்டியுள்ளார். இதை கண்டித்து, வரும் 17-ம் தேதி அதிமுக சார்பில் போராட்டம் நடைபெறும் எனவும் அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், NDA-வில் உள்ள கட்சிகள் இணைந்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். முன்னதாக, <<19360806>>பாலியல் குற்றவாளிகளை<<>> திமுக அரசு பாதுகாப்பதாக EPS குற்றம்சாட்டியிருந்தார்.
News March 12, 2026
வீட்டிலேயே பெடிக்யூர் செய்வது எப்படி?

பெடிக்யூர் செய்யும் ஆசை இருந்தாலும், பணம் அதிகமாக செலவாகும் என்பதால் தயங்குறீங்களா? அட, வீட்டிலேயே அருமையாக பெடிக்யூர் செய்துகொள்ளலாம். எலுமிச்சை பழத்தை வெட்டி, அதில் மஞ்சள் பொடி, ஷாம்பூ, பேக்கிங் சோடாவை சேர்த்துக்கொள்ளுங்கள். இதனை உங்கள் பாதங்களில் தேய்த்து வர இறந்த செல்கள் நீங்கி, பளிச்சென்று காட்சியளிக்கும். பார்லருக்கு செல்பவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News March 12, 2026
ராமதாஸ் வழக்கிற்கு இடைக்கால தடை

கட்சி(பாமக) உரிமை தொடர்பாக ராமதாஸ் தொடர்ந்த வழக்கிற்கு சென்னை HC இடைக்கால தடை விதித்துள்ளது. கட்சி பெயர், சின்னம் பயன்படுத்துவதை எதிர்த்து அன்புமணிக்கு எதிராக சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்து HC-ல் பாமகவின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


