News August 12, 2024
மயிலை சமைத்து சாப்பிட்ட யூடியூபருக்கு போலீஸ் வலை

தேசியப் பறவையான மயிலை சட்ட விரோதமாக கொன்று சமைத்து சாப்பிட்ட யூடியூபரை போலீசார் தேடி வருகின்றனர். தெலங்கானாவின் சிரிசில்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோடம் பிரனய் குமார். யூடியூப் சேனல் நடத்தும் இவர், விதவிதமாக சமையல் செய்து அதை பதிவிட்டு வந்தார். சில தினங்களுக்கு முன்பு மயில் கறி சமைக்கும் வீடியோவை அவர் பதிவிட்டார். இது பெரும் சர்ச்சையான நிலையில், தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Similar News
News March 5, 2026
மீண்டும் அதிமுகவில் இணைந்தனர்.. அதிர்ச்சி

OPS திமுகவில் இணைந்ததால், அவரின் ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைவது அவருக்கு அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. இந்நிலையில், OPS-ன் தீவிர ஆதரவாளராக இருந்த Ex MLA மற்றும் MP-யான வெ. ஏழுமலை, 2 நாளுக்கு முன் அதிமுகவில் இணைந்தார். தொடர்ந்து எம்.பி.பாலாஜி, முன்னாள் அமைச்சர் T.ராமசாமி மகன் T.R.சீனிவாசன், ராமநாதபுரம், தேனியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் EPS-ஐ சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளனர்.
News March 5, 2026
நாணயங்கள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது தெரியுமா?

தற்போது புழக்கத்தில் இருக்கும் நாணயங்கள் வட்ட வடிவில் இருப்பது தற்செயலாக நடந்ததில்லை. 1950-ம் ஆண்டு ஏற்பட்ட இந்த மாற்றத்திற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன *கூர்மையான முனைகள் இல்லாததால், நாணயங்களும் சேதமடையாது, அவற்றை உபயோகிப்பவருக்கும் கையில் கீரல் ஏற்படாது *நாணயங்களை வட்ட வடிவ செய்வது எளிது, செலவும் குறைவு *உற்பத்தியின் போது, வட்ட வடிவம் என்பதால், மெஷினிலும் சிக்காது. SHARE.
News March 5, 2026
சர்வதேச சந்தையில் தங்கம் விலை தடாலடியாக மாறியது

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரின் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் (28g) தங்கம் $47 (இந்திய மதிப்பில் ₹4,329.80) உயர்ந்து $5,177.01-க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளியின் விலையும் $1 உயர்ந்து $84.31-க்கு விற்பனையாகிறது. இதன் தாக்கம், இந்திய சந்தையிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.


