News August 12, 2024

ஷேக் ஹசீனா ராஜினாமா செய்யவில்லை: மகன்

image

வங்கதேச பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்யவில்லை என்று மகன் சஜீப் வாஜீத் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பக்க பதிவில், தனது தாயார் ஹசீனா ராஜினாமா செய்ததாக கூறப்படுவது பொய் என்றும், புனையப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தை விட்டு வெளியேறிய போதோ, அதற்கு முன்போ ராஜினாமா செய்ததாக ஹசீனா அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Similar News

News March 10, 2026

Uber, Ola, Rapido-க்கு தடை!

image

மகாராஷ்டிராவில் Ola, Uber, Rapido ஆகியவற்றின் பைக் டாக்சி சேவைகளுக்கான தற்காலிக லைசென்ஸ்களை அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. அம்மாநிலத்தில் இந்த நிறுவனங்கள் E-bike டாக்சிகளை மட்டுமே இயக்க அனுமதிக்கப்பட்டன. ஆனால் லைசென்ஸ் பெற்றுவிட்டு, இந்நிறுவனங்கள் E-bike களுக்கு பதிலாக பெட்ரோல் பைக்குகளை இயக்கியது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து அரசு இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

News March 10, 2026

த்ரிஷாவின் குற்றச்சாட்டு 100% பொய்: பார்த்திபன்

image

<<19332195>>தனது பேச்சுக்கு த்ரிஷா கண்டனம்<<>> தெரிவித்திருந்த நிலையில், அதற்கு பதிலடியாக வீடியோ வெளியிட்டுள்ளார் பார்த்திபன். குற்றம் சுமத்துகிற மாதிரி த்ரிஷாவின் போட்டோவை போட்டு தான் பேச ஆசைப்பட்டதாக கூறுவது 100% பொய்; யாரிடமும் காசு வாங்கிவிட்டு அப்படி ஒரு நிகழ்ச்சிக்கு போகவில்லை என்றார். தொகுப்பாளர் ‘குந்தவை’ என கூறியதும், அது ஒரு வார்த்தை ஜாலமாக தோன்றியதால் தான் அப்படி பேசியதாகவும் கூறியுள்ளார்.

News March 10, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கண் அழியாமை ▶குறள் எண்: 628 ▶குறள்: இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன். ▶பொருள்: இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதிப்கொள்பவன் அந்தத் துன்பத்தினால் துவண்டு போவதில்லை.

error: Content is protected !!