News August 12, 2024
OLYMPICS: ஐரோப்பிய நாடுகளை பின்தள்ளிய ஆசிய நாடுகள்

ஒலிம்பிக்ஸ் பதக்கப்பட்டியலில் ஐரோப்பிய நாடுகளை ஆசிய நாடுகள் பின்தள்ளியுள்ளன. பட்டியலில் 2வது இடம் பிடித்த சீனா, ஆசிய நாடாகும். அதேபோல, பதக்கப்பட்டியலில் முதல் 10 இடங்களில் ஜப்பான் (3), தென்காெரியா (8) ஆகியவையும் ஆசிய நாடுகளே. பிரான்ஸ்(5), நெதர்லாந்து(6), பிரிட்டன் (7), இத்தாலி(9), ஜெர்மனி(10) ஐரோப்பிய கண்டத்திலுள்ள நாடுகள். அமெரிக்கா (1) ஆஸ்திரேலியா (4) வெவ்வேறு கண்ட நாடுகளாகும்.
Similar News
News March 24, 2026
திருச்சி: வாராந்திர ரயில் நிரந்தர ரயிலாக மாற்றம்!

கச்சிகுடாவில் இருந்து திருச்சி வழியாக தூத்துக்குடிக்கு இயக்கப்பட்டு வரும் வாராந்திர விரைவு ரயில், வரும் ஏப்.6 ஆம் தேதி முதல் நிரந்தர ரயில் சேவையாக மாற்றப்பட உள்ளது. இந்த ரயிலில் நீண்ட தூர பயணத்தை கருத்தில் கொண்டு ஒரு சமையல் பெட்டி இணைக்கப்பட உள்ளது. மேலும் 1 முதல் வகுப்பு ஏசி பெட்டி, மூன்று 2-ம் வகுப்பு ஏசி பெட்டிகள், ஐந்து 3-ம் வகுப்பு ஏசி பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 24, 2026
டிரம்ப்பின் மூக்கை உடைத்த ஈரான்

ஈரானுடன் பேச்சுவார்த்தை நடந்துவருவதால் <<19457456>>5 நாள்கள்<<>> தாக்குதலை நிறுத்துவதாக டிரம்ப் நேற்று அறிவித்திருந்தார். இந்நிலையில், அப்படி எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்று ஈரான் மறுத்துள்ளது. நிதி, எண்ணெய் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களில் இருந்து தப்பவே டிரம்ப் இப்படி போலி செய்திகளை பரப்புகிறார் என கூறிய ஈரான் சபாநாயகர் கலிபாஃப், எச்சரிக்கைக்கு டிரம்ப் பணிந்துவிட்டார் எனவும் விமர்சித்துள்ளார்.
News March 24, 2026
BREAKING: கூட்டணிக்கு அழைப்பு விடுத்தது தவெக

கூட்டணிக்காக மீண்டும் திருமாவளவனுக்கு தவெக தரப்பு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக – விசிக இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது. இதற்கிடையில், 10+1(ராஜ்யசபா) சீட் வழங்க வேண்டும் என விசிக நிர்வாக குழு கூட்டத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், போதிய சீட், உரிய அங்கீகாரம் அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்துடன் திருமாவிடம் தவெகவினர் பேசியதாக கூறப்படுகிறது.


