News August 12, 2024
4 நாள்களுக்கு கனமழை: MET

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் 4 நாள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக MET தெரிவித்துள்ளது. இன்று மதுரை, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூரில் கனமழை பெய்யக்கூடும் என்றும் RMC கூறியுள்ளது. நாளை கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நீலகிரி, ஈரோடு, தருமபுரி, சேலம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
Similar News
News April 6, 2026
பாஜகவுக்கு முக்கியமான நாள்.. அண்ணாமலை செய்த செயல்

பாஜகவின் 47-வது நிறுவன தினத்தையொட்டி, தனது இல்லத்தில் கட்சியின் கொடியை அண்ணாமலை ஏற்றியுள்ளார். இதுகுறித்து தனது X பக்கத்தில் பதிவிட்ட அவர், பாஜகவின் புகழ்பெற்ற பயணத்தை வடிவமைக்க உதவியவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கொடியை ஏற்றியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், பாஜகவின் கொடி தொண்டர்களின் வியர்வையையும், கடின உழைப்பையும், தியாகங்களையும் உள்ளடக்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News April 6, 2026
காய்கறிகள் விலை பாதியாக குறைந்தது!

சென்னையில் காய்கறிகள் விலை பெரிய அளவில் குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தையில், 1 கிலோ சாம்பார் வெங்காயம்- ₹10, பெரிய வெங்காயம்- ₹10, தக்காளி- ₹11, கேரட்- ₹20, கத்திரிக்காய்- ₹15, பீட்ரூட்- ₹15, பச்சை மிளகாய்- ₹25, முருங்கைக்காய்- ₹20 என விலை பாதியாக குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம், இந்த விலை குறைவு தங்களுக்கு கவலையை கொடுத்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
News April 6, 2026
ரயில் டிக்கெட் புக்கிங்.. வந்தாச்சு அதிரடி மாற்றம்!

புக்கிங் செய்த டிக்கெட்டில் உள்ள ஸ்டேஷனை மாற்ற வேண்டும் என்றால், அதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே IRCTC ஆப்பில் கோரிக்கை வைக்க வேண்டிய நிலை இருந்தது. இந்த முறையை தற்போது மாற்றப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் ரயிலில் ஏறுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு வரை, ஸ்டேஷனை மாற்றி கொள்ளலாம். இந்த வசதி கன்பர்ம், ஆர்ஏசி டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். SHARE IT.


