News August 12, 2024
வயநாட்டில் உடல்கள் தொடர்ந்து மீட்பு

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானவர்கள் எண்ணிக்கை 430 ஆக உயர்ந்துள்ளது. 13ஆவது நாளாக நடந்த தேடுதல் வேட்டையில் 3 பேரின் உடல் பாகங்கள் கிடைத்தன. இந்த நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. நிலச்சரிவில் சிக்கிய இன்னும் 126 பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது. காணாமல் போனவர்களை தேடும் பணி மேலும் சில நாட்கள் நீடிக்கும் என கேரள அரசு அறிவித்துள்ளது.
Similar News
News March 5, 2026
மீண்டும் அதிமுகவில் இணைந்தனர்.. அதிர்ச்சி

OPS திமுகவில் இணைந்ததால், அவரின் ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைவது அவருக்கு அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. இந்நிலையில், OPS-ன் தீவிர ஆதரவாளராக இருந்த Ex MLA மற்றும் MP-யான வெ. ஏழுமலை, 2 நாளுக்கு முன் அதிமுகவில் இணைந்தார். தொடர்ந்து எம்.பி.பாலாஜி, முன்னாள் அமைச்சர் T.ராமசாமி மகன் T.R.சீனிவாசன், ராமநாதபுரம், தேனியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் EPS-ஐ சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளனர்.
News March 5, 2026
நாணயங்கள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது தெரியுமா?

தற்போது புழக்கத்தில் இருக்கும் நாணயங்கள் வட்ட வடிவில் இருப்பது தற்செயலாக நடந்ததில்லை. 1950-ம் ஆண்டு ஏற்பட்ட இந்த மாற்றத்திற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன *கூர்மையான முனைகள் இல்லாததால், நாணயங்களும் சேதமடையாது, அவற்றை உபயோகிப்பவருக்கும் கையில் கீரல் ஏற்படாது *நாணயங்களை வட்ட வடிவ செய்வது எளிது, செலவும் குறைவு *உற்பத்தியின் போது, வட்ட வடிவம் என்பதால், மெஷினிலும் சிக்காது. SHARE.
News March 5, 2026
சர்வதேச சந்தையில் தங்கம் விலை தடாலடியாக மாறியது

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரின் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் (28g) தங்கம் $47 (இந்திய மதிப்பில் ₹4,329.80) உயர்ந்து $5,177.01-க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளியின் விலையும் $1 உயர்ந்து $84.31-க்கு விற்பனையாகிறது. இதன் தாக்கம், இந்திய சந்தையிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.


