News August 12, 2024

ஃபோனை ஹேக் செய்துள்ளனர்: சுப்ரியா சுலே

image

தனது போன் மற்றும் வாட்ஸ் அப் ஆகியவை ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளதாக என்சிபி எம்.பி சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தனக்கு யாரும் போன் செய்யவோ, வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பவோ வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ள அவர், இந்த சம்பவம் தொடர்பாக புனே போலீசாரிடம் புகார் அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Similar News

News March 5, 2026

நகைக் கடன்.. முக்கிய அப்டேட்

image

நகைக் கடன் பெற முயற்சிப்பவரா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்த செய்தி. குறைந்த வட்டியில் கடன் பெறுவது மிகவும் முக்கியம். அந்த வகையில், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா (8.05 – 8.55%), இந்தியன் ஓவர்சீஸ் (8.20%), PNB (8.35 – 9.25%), SBI (8.70 – 9%), கனரா (8.75 – 9.25%) ஆகியவே குறைந்த வட்டி விகிதத்தில் நகைக் கடன் வழங்கி வருகின்றன. இதில், ஏதேனும் ஒன்று தேர்வு செய்து கடன் பெற்றால் வட்டி சுமை குறையும். SHARE

News March 5, 2026

கமேனி கொலை: இந்தியா மௌனம் கலைத்தது

image

ஈரான் உச்ச தலைவர் கமேனியின் மறைவுக்கு இந்தியா பல நாள்கள் கழித்து இரங்கல் தெரிவித்துள்ளது. முன்னதாக, கமேனி கொல்லப்பட்டதை உலக நாடுகள் வன்மையாக கண்டிக்க வேண்டும் எனவும், ஆக்கிரமிப்புக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்றும் ஈரான் வலியுறுத்தியிருந்தது. இந்நிலையில், மௌனம் கலைத்த இந்தியா, இந்த இக்கட்டான நேரத்தில் ஈரான் மக்களுடன் துணை நிற்பதாக தெரிவித்துள்ளது.

News March 5, 2026

உயிர் வாழ்ந்தால் போதும்.. மனம் திறந்த ராணா

image

நடிகர் ராணா டகுபதி தனது வாழ்க்கையை புரட்டி போட்ட சிறுநீரக மாற்று சிகிச்சை குறித்து மனம் திறந்துள்ளார். சமீபத்திய பாட்காஸ்டில், பாகுபலி 2-க்கு பிறகு பிரேக் எடுத்து சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றபோது உயிர்வாழ்ந்தால் போதும் என்ற நிலையில் இருந்ததாக கூறினார். கிட்டதட்ட 3 மாதம் பெட் ரெஸ்டில் இருந்த அவர், சிகிச்சைக்கு பின் தனது உடல்நிலையிலும், தோற்றத்திலும் பெரும் மாற்றம் ஏற்பட்டதாக வருந்தியுள்ளார்.

error: Content is protected !!