News August 12, 2024

SA – WI டெஸ்ட் போட்டி ட்ராவில் முடிந்தது

image

SA – WI இடையிலான முதல் டெஸ்ட் டிரா ஆனது. இதில் டாஸ் வென்ற SA அணி, முதல் இன்னிங்சில் 357 ரன்னும், WI அணி 233 ரன்னும் எடுத்தன. இதையடுத்து 124 ரன்கள் முன்னிலையுடன் தனது 2ஆவது இன்னிங்சை தொடங்கிய SA அணி, 173/3 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதையடுத்து WI அணிக்கு 298 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி 201/ 5 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் சமனில் முடிக்கப்பட்டது.

Similar News

News March 10, 2026

வீடுகள் விலை… ஒரே நாளில் ₹7.3 கோடி குறைந்தது

image

போர் காரணமாக துபாய் மற்றும் அபுதாபியில் ரியல் எஸ்டேட் பெரும் சரிவை சந்தித்துள்ளது. அபுதாபியில் 4BHK அடுக்குமாடி குடியிருப்பின் விலை ஒரே நாளில் ₹7.3 கோடி குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போர்ச் சூழல் தொடர்ந்தால் UAE-யின் பொருளாதாரம் சரியும் என்றும், இது வளைகுடாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.

News March 10, 2026

BIG FLASH: சர்வதேச தரத்தில் மாறப்போகும் மதுரை ஏர்போர்ட்

image

மதுரை ஏர்போர்ட்டை சர்வதேச தரத்தில் மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஓடுதளம் 2,285 மீட்டரிலிருந்து 3,810 மீட்டராக நீட்டிக்கப்படுகிறது. இதற்காக 653 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, புதிய முனையம் மற்றும் நவீன வசதிகள் உருவாக்கப்பட உள்ளன. தென் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளில் ஒன்றான மதுரை ஏர்போர்ட் நவீன மயமாக்கப்பட்டால், தென் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி மேம்படும்.

News March 10, 2026

வங்கிக் கணக்கில் 2,000.. வந்தாச்சு HAPPY NEWS

image

விவசாயிகளுக்கான PM KISAN திட்டத்தின் 22-வது தவணைத் தொகை ₹2,000, மார்ச் 13-ம் தேதி விடுவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அசாமில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் இந்த நிதியை பிரதமர் மோடி விடுவிக்க உள்ளார். பிப்ரவரி மாதமே இந்த நிதி வரும் என காத்திருந்த விவசாயிகளுக்கு, இப்போது நல்ல செய்தி வந்துள்ளது. முக்கியமாக, உங்கள் வங்கிக் கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

error: Content is protected !!