News August 12, 2024

அன்புமணி குற்றச்சாட்டு தவறு: உண்மை சரிபார்க்கும் குழு

image

ஆம்ஸ்ட்ராங்கின் 2 வயது மகள் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை என அரசின் உண்மை சரிபார்க்கும் குழு விளக்கமளித்துள்ளது. சிபிஐ விசாரணை கோரி, போலீசாரின் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட 1500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், குழந்தை மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளது. முன்னதாக, ஆம்ஸ்ட்ராங் குழந்தை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக அன்புமணி விமர்சித்திருந்தார்.

Similar News

News March 7, 2026

புதுச்சேரியில் கம்யூனிஸ்ட் தனித்து போட்டி.. திமுக ஷாக்!

image

புதுச்சேரியில் 2 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளதால் திமுக அதிர்ச்சி அடைந்துள்ளது. TN-ல் நீண்ட இழுபறிக்கு பிறகு ஒருவழியாக கூட்டணி இறுதி வடிவம் பெற்றுள்ளது. ஆனாலும், புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் மோதல் போக்கு நீடிக்கிறது. இதனால், லாஸ்பேட்டை மற்றும் திருபுவனை தொகுதியில் தனித்து களம் காண்பதாக CPM அறிவித்துள்ளது. இது பற்றி உங்கள் கருத்து?

News March 7, 2026

இந்தியாவை போட்டியாளராக மாற விடமாட்டோம்: அமெரிக்கா

image

சீனாவை போல இந்தியாவை எங்களது போட்டியாளராக மாற விடமாட்டோம் என டெல்லியில் நடந்த மாநாட்டில் அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவுக்கு சந்தையை திறந்து விட்டது மிகப்பெரிய தவறு; அதை நாங்கள் மீண்டும் செய்ய மாட்டோம் என்பதை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் செய்யும் எந்த ஒரு ஒப்பந்தமும் அமெரிக்க மக்களின் நலனுக்கானது எனவும் கூறியுள்ளார்.

News March 7, 2026

புஸ்ஸி ஆனந்தை ஓரங்கட்டுகிறாரா விஜய்?

image

ஆரம்பத்தில் தவெகவில் All in All-ஆக வலம் வந்தவர் தான் புஸ்ஸி ஆனந்த். இடையில் இவர்மீது ஜானுக்கும், ஆதவுக்கும் அதிருப்தி அதிகரித்ததாக பேசப்பட்டது. எனவே ஆனந்த் குறித்து இருவரும் விஜய்யிடம் பலமுறை புகார் வைத்தனராம். போதாத குறைக்கு ஆனந்தின் மேடைபேச்சுகளும் ஆன்லைனில் கேலிக்கு உள்ளானதால் விஜய் மொத்தமாக ஆனந்தை ஒதுக்கிவைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால்தான் அவர் தவெக மேடைகளில் பேசுவதில்லை என்கின்றனர்.

error: Content is protected !!