News August 12, 2024

மகாலட்சுமி அருளிய வரலட்சுமி விரதம்

image

செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமியை வீட்டிற்கு வரவேற்று வழிபட வேண்டிய சிறப்பான விரதம் மகாலட்சுமி விரதமாகும். இந்த விரதத்தை சுமங்கலி பெண்களும், திருமணமாகாத பெண்களும் கடைபிடிக்கலாம். ஆகஸ்ட் 16ஆம் தேதி இந்த விரதத்தை கடைபிடிப்போரின் வீட்டில் வறுமை தங்காது, மாங்கல்ய பலம் பெருகும் என்பது ஐதீகம். இந்த நாளில் அம்பிகைக்குரிய மந்திரங்களை போற்றி பாடி, மகாலட்சுமியின் மனம் குளிர பூஜைகள் செய்ய வேண்டும்.

Similar News

News March 11, 2026

அரியலூர்: அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

image

அரியலூர் நகரத்தில் 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாற்று கட்சியிலிருந்து விலகி தங்களை அதிமுகவில் நேற்று இரவு மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமையில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் நகர செயலாளர் செந்தில், அம்மா பேரவை நிர்வாகி சங்கர், மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் செயலாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News March 11, 2026

BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

image

ஆபரணத் தங்கத்தின் விலை 2-வது நாளாக இன்றும் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹70 உயர்ந்து ₹15,120-க்கும், சவரனுக்கு ₹560 உயர்ந்து ₹1,20,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாளில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ₹1,360 அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

News March 11, 2026

டெல்லி பாஜக மீது அண்ணாமலை அதிருப்தியா?

image

மாநில தலைவர் பதவியைவிட பெரிய பதவி எதுவும் வழங்கப்படாததால், பாஜக தலைமை மீது அண்ணாமலை அதிருப்தியில் இருந்ததாக பேசப்பட்டது. இதனால்தான், தந்தையை கவனிக்க வேண்டும் என கூறி சமீபத்தில் தேர்தல் பணிக்கான பதவியை அவர் மறுத்தார் என்றனர். இந்நிலையில், கோவை (அ) திருப்பூரில், ஏதேனும் ஒரு தொகுதியை எடுத்துகொள்ளலாம் என மீண்டும் ஒரு ஆஃபர் கொடுக்கப்பட்டதாம். ஆனால் அதையும் அவர் மறுத்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

error: Content is protected !!