News August 11, 2024
பல்லடத்தில் நான்கு பேர் கைது

திருப்பூர், பல்லடம் அருகே கடந்த வியாழக்கிழமை 5 பேர் கொண்ட கும்பல் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வினோத் கண்ணன் என்பவரை ஓட ஓட விரட்டி வெட்டி தலையை முழுவதுமாக சிதைத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இக்கொலையில் ஈடுபட்ட நித்திஷ்குமார் (22), காளீஸ்வரன்(25) மற்றும் அவர்களுக்கு தகவல் அளித்த பிரபுதேவா(32), சாமிநாதன்(52) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Similar News
News March 10, 2026
சிவன்மலை உத்தரவு பெட்டியில் என்ன பொருள் தெரியுமா?

காங்கேயம் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பக்தரின் கனவில் முருகன் தோன்றி உத்தரவிடும் பொருட்கள் ‘ஆண்டவன் உத்தரவு’ பெட்டியில் வைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இன்று ஒரு பக்தரின் கனவில் தோன்றிய முருகப்பெருமான் வழங்கிய உத்தரவின்படி, பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், அருகம்புல் மற்றும் வெற்றிலை பாக்கு வைக்கப்பட்டுச் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
News March 10, 2026
திருப்பூர்: மாதம்தோறும் ரூ.4,000 நிதியுதவி வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு, மாதம் தலா ₹4,000 வீதம் 3 ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.இந்தத் திட்டத்தைப் பெற, வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது.நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.
News March 10, 2026
உடுமலை அருகே கொத்தாக அதிமுகவில் ஐக்கியம்

உடுமலை குறுஞ்சேரி ஊராட்சியில் மாற்று கட்சிகளில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர். ஒன்றிய செயலாளர் முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற இந்நிகழ்வில், புதிய உறுப்பினர்கள் உற்சாகமாக வரவேற்கப்பட்டனர். தேர்தல் நெருங்கும் வேளையில், கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் இந்த இணைப்பு நிகழ்வு நடைபெற்றது.


