News August 11, 2024

8ஆம் வகுப்பு தனித்தேர்வருக்கு நாளை ஹால்டிக்கெட்

image

8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கு, நாளை முதல் ஹால்டிக்கெட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆகஸ்ட் 19 முதல் 23 வரை நடைபெறவுள்ள பொதுத்தேர்வை எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், நாளை முதல் <>இந்த<<>> இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

Similar News

News March 11, 2026

சிலிண்டர் தட்டுப்பாடு என CM சொல்வது பொய்: நயினார்

image

தமிழகம் உள்பட எங்குமே சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருச்சியில் பேசிய அவர், சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக CM ஸ்டாலின் சொல்வது முழுக்க முழுக்க பொய் என்றார். ஓட்டல்களில் உணவு வகைகள் குறைக்கப்பட்டதற்கும், சிலிண்டர் தட்டுப்பாட்டுக்கும் சம்பந்தம் இல்லை; கேஸ் தேவைப்பட்டால் ஒரு கேஸ் டீலர் என்ற முறையில் தானே அதனை வழங்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

News March 11, 2026

ஹாஸ்பிடல்களில் விறகு அடுப்பு: மா.சுப்பிரமணியன்

image

சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், அரசு ஹாஸ்பிடல் கேண்டீன்களில் பாதிப்பில்லை என மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், சிலிண்டர் தட்டுப்பாட்டின் மாற்று ஏற்பாடாக, அனைத்து அரசு ஹாஸ்பிடல்களிலும் Induction Stove & விறகு அடுப்புகளை தயார்நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளார். நோயாளிகளுக்கு பால், பழம், ரொட்டி உள்ளிட்டவை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

News March 11, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!