News August 11, 2024
இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, திருவண்ணாமலை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனி, திருப்பூர், தென்காசி, கோவை, நீலகிரி மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News August 23, 2025
தி.மலை மாவட்டம் மழை அளவு மில்லி மீட்டர் வெளியீடு

தி.மலை மாவட்டத்தில் நேற்று (22/08/2025) ஆரணி, போளூர் செய்யார், வந்தவாசி ,ஜவ்வாது மலை ,களம்பூர், கண்ணமங்கலம் செங்கம் தி.மலை போன்ற பகுதிகளில் பரவலாக கனமழையும். இடியும் கூடிய மிதமான மழையும் பெய்தது. நேற்றைய மழையின் அளவினை மில்லி மீட்டரில் வெளியிடபட்டுள்ளது. இன்று( 23-08-2025)இரவு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெப்பம் தணிந்து குளிர்ச்சியாக காணப்படுகிறது.
News August 23, 2025
தி.மலை: சிலிண்டர் புக் பண்ண ஈஸியான வழி

கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இத்தகவலை இல்லத்தரசிகளுக்கு ஷேர் பண்ணுங்க!
News August 23, 2025
தி.மலை முதலமைச்சர் கோப்பைக்கான தேதிகள் அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற உள்ள முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிக்கான தேதிகளை திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அலுவலர் அறிவித்துள்ளார். அதன்படி இதில் (26-08-2025) முதல் (10-09-2025) வரை மாவட்ட விளையாட்டு அரங்கில் பல்வேறு பிரிவுகள் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுபவருக்கு சான்றிதழ் பதக்கம் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.