News August 11, 2024

ஆவடியில் விஷ வாயு தாக்கி தொழிலாளர் உயிரிழப்பு

image

சென்னை அடுத்த ஆவடி மாநகராட்சியில் ஒப்பந்த தொழிலாளர் கோபிநாத் என்பவர் பாதாள சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, விஷ வாயு தாக்கியதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை மீட்டு ஆவடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் ஒருவரும், கடந்த ஆண்டு ஒருவரும் ஆவடி மாநகராட்சியில் இதேபோல் பலியானது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 10, 2026

சென்னை: ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து!

image

நெற்குன்றத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சந்திரசேகர் (47), நித்தின்காமேஷ் (22) என்பவரின் வீட்டிற்கு வெளியே தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு கடைக்குச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, ஆட்டோவின் டயரில் காற்று இறக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த நித்தின்காமேஷ், சந்திரசேகரை கத்தியால் குத்தினார். இது தொடர்பாக கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 9, 2026

சென்னை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (மார்ச்.9) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 9, 2026

சென்னை: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

image

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு <>pmjay.gov.in <<>>இணையத்தில் ரேஷன், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் காப்பீடு அட்டை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு உங்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!