News August 11, 2024

புதுப்படம் தயாரிக்கும் சிம்பு?

image

சிம்புவின் 48ஆவது படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி அந்தப்படம் எடுக்கப்படவில்லை. சுமார் ஓராண்டுக்கும் மேல் படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதையடுத்து அந்தப் படத்தை தானே தயாரித்து, நடிக்க சிம்பு முடிவெடுத்து இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Similar News

News March 16, 2026

மாதம் ₹85,000.. கணவரை வாடகைக்கு விட்ட மனைவி!

image

10 ஆண்டு திருமணம், மகன்(8) இருக்கும் நிலையில், தாய்லாந்து பெண் ஒருவர், தன் கணவர் திருமணம் மீறிய உறவில் இருப்பதை கண்டறிந்துள்ளார். தங்களால் பிரிந்து வாழ முடியாது என காதல் ஜோடி மறுத்த போது, மனைவிக்கு நூதன யோசனை உதித்துள்ளது. கணவன் அந்த உறவில் தொடர மாதம் ₹85,000 Demand செய்துள்ளார். இந்த ஆஃபரை இருவரும் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. தற்போது செய்தி வெளியாக, பலரும் ஆச்சரியத்தில் வாயை பிளந்துள்ளனர்.

News March 16, 2026

புதுச்சேரி வேட்பாளர்களை இறுதி செய்யும் விஜய்

image

தவெக சார்பில் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை, விஜய் இன்று இறுதி செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இன்று முதல் 23-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யப்படுகிறது. அங்கு போட்டியிட ஆர்வமாக இருக்கும் வேட்பாளர்களிடம், விஜய் இன்னும் சற்றுநேரத்தில் நேர்காணல் நடத்துகிறார்.

News March 16, 2026

FLASH: வெள்ளி விலை ₹24,000 குறைந்தது

image

<<19395246>>தங்கத்தை <<>>தொடர்ந்து, வெள்ளி விலையும் குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளி ₹4 குறைந்து ₹276-க்கும், கிலோ வெள்ளி ₹4,000 குறைந்து ₹2,76,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மார்ச் 11-ல் கிலோ வெள்ளி ₹3,00,000-க்கு விற்பனையான நிலையில், கடந்த 5 நாள்களில் மட்டும் மொத்தம் ₹24,000 குறைந்துள்ளது. வரும் நாள்களில் வெள்ளி விலை மேலும் குறையும் என கூறப்படுவதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!