News August 11, 2024
மகாராஜா ரீமேக்கில் அமீர்கான்

தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ₹100 கோடிக்கும் மேல் வசூலைக் குவித்த படம் மகாராஜா. அந்தப் படத்தை அமீர்கான், இந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியபடி இருந்தது. இத்தகவலை அமீர்கான் தற்போது உறுதிப்படுத்தியுள்ளார். மகாராஜா படத்தின் கதை பிடித்திருப்பதாகவும், அந்தப் படத்தை வாங்கி, இந்தியில் தயாரித்து தாமே கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
Similar News
News March 8, 2026
SPORTS 360°: பைனலுக்கு முன்னேறினார் லக்ஷயா சென்

*ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் லக்ஷயா சென் பைனலுக்கு முன்னேறினார். *AFC மகளிர் ஆசியக் கோப்பையின் லீக் போட்டியில் இந்தியாவை 0-11 என்ற கணக்கில் ஜப்பான் வீழ்த்தியது. *காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஜிபி ஃபார்முலா 1 தொடரில் இருந்து வெர்ஸ்டப்பன் விலகினார். *ஹாக்கி மகளிர் உலகக்கோப்பைக்கு தகுதி பெறும் கடைசி வாய்ப்பாக இந்திய அணி உருகுவேவை எதிர்கொள்கிறது.
News March 8, 2026
ஏசியை பயன்படுத்தினாலும் மின்சாரத்தை சேமிக்கலாம்!

பல இடங்களில் வெயில் உச்சத்தை எட்டிவரும் நிலையில், வீட்டில் AC பயன்படுத்துவது அவசியமாக மாறியுள்ளது. இந்நிலையில் மிக குறைந்த மின்சாரத்தில் AC-யை பயன்படுத்த நிபுணர்கள் கூறும் டிப்ஸ் இதோ. *AC பயன்படுத்தும்போது கதவுகள், ஜன்னல்களை மூடுவது அவசியம். *எங்கிருந்தும் இயக்கும் வகையில் ஸ்மார்ட் தெர்மோஸ்டாட்களை பயன்படுத்த வேண்டும். *Eco mode, Energy Saving mode போன்றவற்றின் மூலமும் மின்சாரத்தை சேமிக்கலாம்.
News March 8, 2026
பெண் இனத்திற்கே தலைகுனிவு: பிரேமலதா

பிறந்த சில நாள்களே ஆன <<19313133>>நாய்குட்டிகளை ஒரு பெண் சுவற்றில் தூக்கி அடித்து கொலை<<>> செய்த சம்பவம் தன் மனதை ஆழமாக உலுக்கியுள்ளதாக பிரேமலதா தெரிவித்துள்ளார். அப்பெண் கைது செய்யப்பட்டிருந்தாலும், அச்செயலின் கொடுமை ஒட்டுமொத்த மனிதநேயத்திற்கே கேள்விக்குறியாக உள்ளது என்றும், பெண் இனத்தைச் சேர்ந்த ஒருவரால் ஒரு வாயில்லா ஜீவனின் உயிர் இவ்வளவு கொடூரமாக பறிக்கப்பட்டிருப்பது வேதனைக்குரியது எனவும் கூறியுள்ளார்.


