News August 11, 2024
குற்றச்சாட்டுகளுக்கு அதானி குழுமம் விளக்கம்

உச்சநீதிமன்றத்தால் ஆதாரமற்றவை என நிரூபிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்ட கூற்றுக்களை மறுசுழற்சி செய்து ஹிண்டன்பெர்க் தற்போது ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளதாக அதானி குழுமம் விமர்சித்துள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கள் அடிப்படை ஆதாரமற்றவை எனவும், தனிப்பட்ட லாபத்தை மட்டும் நோக்கமாக கொண்டவை எனவும் தெரிவித்துள்ளது. மேலும், தங்களது வெளிநாடு முதலீடு சார்ந்த தகவல்கள் வெளிப்படத்தன்மையுடன் இருப்பதாக கூறியுள்ளது.
Similar News
News March 21, 2026
புதுக்கோட்டை: இலவச வீட்டு மனை வேண்டுமா?

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. அதன்படி 5 ஆண்டுகளாக புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் வசிப்பவர்களுக்கு அதிகபட்சமாக 2 சென்ட், கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு 3 சென்ட் நிலமும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு உங்கள் பகுதி VAO-வை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!
News March 21, 2026
2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, <<19433149>>தென்காசி, நெல்லை<<>> மாவட்டங்களில் ஏப்.1(புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏப்.1-ம் தேதி முழு ஆண்டு தேர்வும் தொடங்கவிருப்பதால் பள்ளி மாணவர்களிடையே சற்று குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், உள்ளூர் விடுமுறை அறிவிப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. SHARE IT
News March 21, 2026
தெலுங்கில் தவெக பரப்புரை ஸ்டார்ட்!

புதுச்சேரியின் தெலுங்கு பிராந்தியமான ஏனாமில் தவெக தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளது. தோட்டா ராஜு என்பவரை அந்த தொகுதியின் வேட்பாளராக களமிறக்க கட்சித் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, டாடா ஏஸ் வாகனத்தில் தெலுங்கு வாசகங்கள் அடங்கிய பேனர்களுடன் தோட்டா ராஜு பரப்புரை மேற்கொண்டு வருகிறார். தெலுங்கர்கள் அதிகமுள்ள தொகுதியில் தவெக தடம் பதிக்குமா?


