News August 11, 2024
பச்சிளம் குழந்தையை தெரு நாய்கள் தின்ற கொடுமை

தெலங்கானாவில் வாராங்கல் மாவட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை அருகே நேற்று தெரு நாய்கள், பொருள் ஒன்றை கடித்து குதறிக் கொண்டிருந்தன. இதனைக் கண்ட காவலர், நாய்களை விரட்டிவிட்டு பார்த்த போது அது பச்சிளம் குழந்தை என தெரியவந்தது. குழந்தை உடலின் கீழ் பகுதி இல்லாததால் அது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என தெரியவில்லை. குழந்தையை அங்கு போட்டு சென்றது யார் என விசாரணை நடந்து வருகிறது.
Similar News
News March 5, 2026
திமுக கூட்டணி.. ஒரே இரவில் மொத்தமாக மாறியது

திமுகவா, தவெகவா என இரட்டை நிலைப்பாட்டுடன் இருந்ததாக கூறப்பட்ட காங்., இறுதியாக நேற்று இரவு திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்தது. இந்நிலையில், இதுவரை 21 கட்சிகளுடன் திமுக கூட்டணி அமைத்துள்ளது. இதனால் 2026 தேர்தலில் வெற்றி நிச்சயம் என்பதையே <<19299599>>‘Over’ என்ற சைகையில்<<>> ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தினார் என திமுகவினர் கூறி வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?
News March 5, 2026
வெடிக்காமல் போனது விஜய் வைத்த BOMB

TVK முதல் மாநாட்டில் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு தருவதாக விஜய் கூறியிருந்தார். அதன்பிறகு திமுக, அதிமுகவில் நிலவிய கூட்டணி சலசலப்பை சேலம் கூட்டத்தில் குறிப்பிட்டு, தான் வைத்த BOMB நன்றாக வெடிக்கிறது என விஜய் பேசினார். ஆனால், இதுவரை தவெகவுடன் யாரும் கூட்டணி சேரவில்லை. காங்கிரஸும், திமுக கூட்டணியில் தொடர்வதால் விஜய் வைத்த BOMB வெடிக்கவில்லை என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
News March 5, 2026
ஃபைனலுக்கு முன்னேறுமா இந்திய அணி?

டி20 WC இரண்டாவது அரையிறுதியில், இன்று ENG Vs ING அணிகள் மோதுகின்றன. பேட்டிங், பவுலிங்கில் இந்தியா வலுவாக திகழ்ந்தாலும் அபிஷேக்கின் ஃபார்ம், மோசமான பீல்டிங் கவலையை தருகிறது. மறுபுறம், இங்கிலாந்து அணி பேட்டிங்கில் சால்ட், புரூக்(C), வில் ஜாக்ஸ் & பந்துவீச்சில் அடில் ரஷித், ஆர்ச்சரை பெருமளவு நம்பியிருக்கிறது. வான்கடேவில் Dew-வின் தாக்கம் காரணமாக சேஸ் செய்வது நல்லது. யார் வெல்வார்கள்? உங்க கணிப்பு


