News August 11, 2024
வயநாடு நிலச்சரிவு: தனுஷ் ₹25 லட்சம் நிதியுதவி

வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணிகளுக்காக நடிகர் தனுஷ் ₹25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். நிலச்சரிவில் இருந்து மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபடும் குழுவினருக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பலர் காணாமல் போயுள்ளனர். தொடர்ந்து, அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
Similar News
News March 20, 2026
BREAKING: பெட்ரோல் விலை உயர்ந்தது.. புதிய அறிவிப்பு

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரின் எதிரொலியாக பிரீமியம் பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ₹2.09 முதல் ₹2.35 வரை உயர்த்துவதாக ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் உள்ளிட்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதேநேரத்தில், சாதாரண பெட்ரோலின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
News March 20, 2026
அதிமுகவா? அமித்ஷா திமுகவா? KN நேரு

’டெல்லிக்கு EPS ஓடுவதற்கு பெயர்தான் அதிமுக கூட்டணிக்கு தலைமை தாங்குவதா?’ என KN நேரு விமர்சித்துள்ளார். ED-யின் சம்மன் பெற்றவர் போல டெல்லிக்கு சென்று, தொகுதி பங்கீட்டுக்காக 2 மணிநேரம் காத்திருந்து அமித்ஷாவை EPS சந்தித்திருக்கிறார் என சாடியுள்ளார். கூட்டணிக்கு தலைமை தாங்கும் அதிமுக அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறாததை குறிப்பிட்டு, அதிமுகவா, அமித்ஷா திமுகவா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
News March 20, 2026
கேஸ் சிலிண்டர்.. அரசு அதிரடி அறிவிப்பு

கேஸ் சிலிண்டர் தொடர்பாக மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் பதுக்கலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழாய் வழி கேஸ் (PNG) இணைப்புகளை விரிவுபடுத்துவதில் ஒத்துழைப்பு அளிக்குமாறும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடின்றி சீராக கிடைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


