News August 11, 2024
நல்ல படம் எடுத்ததால் ஆதரவு இல்லை: ரஞ்சித் வேதனை

நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் திரைப்படம் வெளியாகியுள்ளது. தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக படம் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து பேசிய ரஞ்சித், குடும்பங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக நல்ல படம் எடுத்திருக்கிறேன். யாரும் எனக்கு ஆதரவு தரவில்லை. என்னை பற்றி தவறாகவும் சித்தரிக்கிறார்கள். தயவுசெய்து அப்படி செய்யாதீர்கள் எனக் கேட்டுக்கொண்டார்.
Similar News
News March 5, 2026
சர்வதேச சந்தையில் தங்கம் விலை தடாலடியாக மாறியது

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரின் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் (28g) தங்கம் $47 (இந்திய மதிப்பில் ₹4,329.80) உயர்ந்து $5,177.01-க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளியின் விலையும் $1 உயர்ந்து $84.31-க்கு விற்பனையாகிறது. இதன் தாக்கம், இந்திய சந்தையிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.
News March 5, 2026
தமிழக அரசியலில் இதுவே முதல்முறை

2026 தேர்தலுக்கு திமுக 21 கட்சிகளுடன் பிரமாண்டமான கூட்டணியை அமைத்துள்ளது. TN அரசியல் வரலாற்றிலேயே ஒரே கூட்டணி, சிந்தாமல் சிதறாமல் மேலும் புதிய கட்சிகளை சேர்த்து 4-வது முறையாக தேர்தலை சந்திப்பது இதுவே முதல் முறை. குறிப்பாக, அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள்கூட(பிரேமலதா, தமிமுன் அன்சாரி, நெல்லை முபாரக், கருணாஸ், தனியரசு உள்ளிட்டோர்) திமுகவுடன் இணைந்துள்ளன.
News March 5, 2026
மக்களுடன் தான் தவெக கூட்டணியா?

காங்., உடன் கைகோர்க்கலாம் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த தவெகவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். பண்ருட்டி ராமச்சந்திரன், முஸ்தபா ஆகியோர் விஜய்க்கு ஆதரவளித்தாலும், பெரிய கட்சியான காங்., வரும் என்ற நம்பிக்கை சிதைந்துவிட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ‘மக்களுடனே கூட்டணி’ என்ற நிலைப்பாட்டை விஜய் விரைவில் அறிவிப்பார் என கூறப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?


