News August 11, 2024

வீட்டை வாடகைக்கு விடுகிறீர்களா?

image

வீட்டு உரிமைத்தை பாதுகாக்க, ‘வாடகை ஒப்பந்தத்தை’ விட, ‘லீஸ் மற்றும் லைசென்ஸ்’ ஆவணம் சிறந்ததாக உள்ளது. இதில், குத்தகைதாரருக்கு சொத்தின் மீது எவ்வித உரிமையும் கிடைக்காத வகையில் கடுமையான விதிகள் உள்ளன. வாடகை ஒப்பந்தத்தில் இருந்து சில ஷரத்துகள் மட்டுமே இதில் மாற்றப்பட்டுள்ளன. இந்த ஆவணத்தை நோட்டரி மூலம் முத்திரை தாளில் மட்டுமே பெற முடியும். இதன் ஆயுட்காலம் 10 நாள்கள் முதல் 12 ஆண்டுகள் வரை இருக்கலாம்.

Similar News

News March 22, 2026

சற்றுமுன்: விலகுவதாக அறிவித்தார் சரத்குமார்

image

பாஜகவில் தனக்கு பொறுப்புகள் வழங்கப்படாதது குறித்த ஆதங்கத்தை சரத்குமார் கொட்டி தீர்த்துள்ளார். தானும், ராதிகாவும் தேர்தலில் போட்டியிடாமல் விலகுகிறோம்; தலைமை சொன்னால் கூட தேர்தலில் நிற்க மாட்டோம் என்று கூறியுள்ளார். அதேசமயம் தனது ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்ற ஒரு பட்டியலை தேசிய தலைமைக்கு நாளை கடிதமாக கொடுக்க உள்ளதாகவும், தன் கோரிக்கைக்கு செவிசாய்த்தே ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

News March 22, 2026

புதிய சாதனை படைத்தார் PM மோடி.. எதுலன்னு பாருங்க..

image

இந்தியாவில் நீண்ட காலம் அரசு பதவி வகித்தவர் என்ற சாதனையை PM மோடி படைத்துள்ளார். குஜராத் CM, இந்தியாவின் PM என மொத்தம் 8,931 நாள்கள் அரசின் தலைமை பதவியில் இருக்கும் மோடி, இந்த சாதனைக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார். முன்னதாக சிக்கிம் முதல்வராக இருந்த பவன் குமார் சாம்லிங் 8,930 நாள்கள் பதவி வகித்து இந்த சாதனையை படைத்திருந்தார். இந்நிலையில், அவரின் சாதனையை PM மோடி முறியடித்துள்ளார்.

News March 22, 2026

கருப்பு படத்தின் கதை முதலில் விஜய்க்கானது: RJ பாலாஜி

image

சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள ‘கருப்பு’ படம் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், இப்படத்தின் கதை முதலில் விஜய்யிடம் கூறப்பட்டதாக, அதன் இயக்குநர் RJ பாலாஜி தெரிவித்துள்ளார். விஜய்யும் ஓகே சொன்னதாகவும், ஆனால் திரைக்கதை அமைக்க காலதாமதம் ஆகிய நிலையில், அதற்குள் விஜய் அரசியலுக்குள் சென்றுவிட்டார் என்றும் கூறியுள்ளார். இதன்பிறகே சூர்யாவுக்கு ஏற்றார்போல் திரைக்கதை மாற்றப்பட்டது என்றார்.

error: Content is protected !!